உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

எஸ். கோவிந்த், கோவை: மனிதர்கள்... நாய்... என்ன வித்தியாசம்!யார் எதிரிகள் என்பதை, மனிதனால் விரைவில் கண்டுபிடித்து விட முடியாது! ஆனால், நாய்கள் உடனே கண்டுபிடித்து விடும்; இது தான் வித்தியாசம்!கு. ஜெயக்குமார், சென்னை: கூவம் என்ற பெயர், அந்த ஆற்றிற்கு எப்படி வந்தது?சென்னைக்கு, 320 கி.மீ., துாரத்தில், கூவம் என்ற கிராமத்தில் உற்பத்தி ஆகி, இங்கு பாய்ந்து வந்து கடலில் கலக்கிறது; இப்போது அது நன்னீர் ஆறு அல்ல; சாக்கடை ஆறு!ஆர். நாகநாதன், வேலுார்: என் எதிரிக்கு புத்தி கற்பிக்க விரும்புகிறேன்; நான் என்ன செய்ய வேண்டும்?நன்மையைச் செய்து விடுங்கள்!அவனை பழி வாங்க வேண்டும் என்ற நினைவு வரும்போது, மன அமைதியை இழந்து விடுகிறோம்! நம் மன அமைதி போய் விட்டால், அதை விட இழப்பு ஏதுமில்லையே!ஜி. விஜயகுமார், நீலாம்பூர், கோவை: சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டம் நன்மையா?நன்மையே! சாலை பெரிதானால், போக்குவரத்து சுலபமாகும்! சாலைக்காக எடுக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய விலையும் கிடைக்கும் தானே!ப. செல்வன், சென்னை: அலோபதி, ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதம்... இதில் உங்களுக்கு பிடித்த வைத்தியம் எது?ஆரம்பத்தில், அலோபதி... அப்புறம், ஆயுர்வேதம் தான் தோதாக இருக்கிறது... சீக்கிரம் குணமாகி விடுகிறது! ஓமியோபதி, சித்தா பக்கம் போக, வாய்ப்பு கிடைக்கவில்லை! * ச. மோகித், தஞ்சாவூர்: 'நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து, புறக்கணிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்' என்று, உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதே...மிகச் சரியானதே... பதவியை மட்டும் பறித்தால் போதாது... சரியான தண்டனையும் தரவேண்டும்!வி. கோபாலன், சென்னை: என் நண்பன், 'நாளை... நாளை...' என்கிறான். இதன் பொருள் என்ன?இன்றைய உழைப்பின் பின் பலன் தானே, நாளை! இன்றைய உழைப்பின் பலன் தான் நாளை என்பதை, உங்கள் நண்பர் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்; பாராட்டுக்கள்!* ஆர். சந்திரகுமாரி, பொள்ளாச்சி: இந்தியா விடுதலையாகுமுன், மகாராஜாக்கள் இருந்தனரே... அவர்கள் இப்போது எப்படி இருக்கின்றனர்?கலர், கலர் வேட்டி கரைகளுடன் உள்ளனரே... நீங்கள் கவனிக்கவில்லையா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !