உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

வி.சி. கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்துார்: முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோவிலில், 'சத்ரு சம்ஹார யாகம்' நடத்தினாராமே...'திராவிட மாடல் அரசு' என்ன என்பது, இப்போது உங்களுக்கு புரிகிறதா?எ. முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: தெரியாத்தனமாக சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன்... அதை நிறுத்த ஒரு யோசனை சொல்லுங்களேன்...நிறுத்தவே முடியாது! நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பக்கத்து வீட்டில், 85 வயது முதியவர் இருந்தார்... அவரது மகன் ஒரு போலீஸ் அதிகாரி... அந்த முதியவர், 'சிசர்' பிடிப்பார்... அவரிடம் பேசும்போது, இதுபற்றி விசாரித்தேன். தன், 10 வயதில் ஆரம்பித்ததாகவும், பலமுறை முயற்சித்தும் விட முடியவில்லை என்றார்!* ஜி. குப்புசுவாமி, சென்னை: 'மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி வராது...' என்று, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி கூறியுள்ளது பற்றி...இவர் தான் டில்லி வந்து, நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் அழைத்து, ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தினாரே... ஆனால், என்ன நடந்தது... அதே போல தான் அவரின், இந்த, 'ஸ்டேட்மென்டும்!'* ஏ. கணேசன், துாத்துக்குடி: சென்னையில் நடைபெறும், 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி, விளம்பர பதாகைகளில், பா.ஜ.,வினர், பிரதமர் மோடியின் படத்தை ஒட்டுவது, நியாயமான செயல்தானா?வெளிநாட்டில் நடந்திருக்க வேண்டிய போட்டியை, நம் நாட்டிற்கு கொண்டு வந்தனர்... அதை தமிழகத்தில் நடத்தச் சொன்னார், மோடி... அதனால், அவர் படத்தையும் சேர்க்கணும் அல்லவா? முருகு. செல்வகுமார், சென்னை: 'தமிழகத்தில், பா.ஜ., வென்றால், நிச்சயம், 'டாஸ்மாக்' ஒழிக்கப்படும்...' என்கிறாரே, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை...'டாஸ்மாக்' பிரியர்கள் ஒருவர் கூட பா.ஜ.,விற்கு ஓட்டுப் போட மாட்டார்கள்... அப்புறம் தானே ஆட்சியைப் பிடிக்கும் கனவு!ஆர்.எ. ரமா, நெல்லை: 'தினமலர்' முதன் முதலில் திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்கிறேன் நான்! என் தோழியோ, திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது என்கிறாள்... இதில் எது சரி?நீங்கள் சொல்வது தான் சரி! மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, குமரி மாவட்டத்தை கேரளாவுடன் இணைத்து விட்டனர்! அம்மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டத்திற்காக, பயப்படாமல், நிறுவனர் டி.வி.ஆர்., திருவனந்தபுரத்தில் நிறுவினார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !