உள்ளூர் செய்திகள்

சைக்கிள் கிராமம்!

கேரளாவிலுள்ள கருநாகப்பள்ளியில், கோழிக்கோடு ( இது கோழிக்கோடு மாவட்டம் அல்ல) என்ற கிராமம் உள்ளது. இதை, சைக்கிள் கிராமம் என்று அழைக்கின்றனர். ஷிகாப் என்ற வாலிபருக்கு, திடீர் என்று சைக்கிள் மீது பிரியம் ஏற்படவே, ஒரு பழைய சைக்கிளை வாங்கினார். அதை, தினமும் காலையில், கிராமத்து சாலை களில் ஓட்டி மகிழ்ந்தார். இதை கண்ட, வேறு சிலரும், சைக்கிளில் சுற்றத் துவங்கினர். இப்போது, வயது வேற்றுமை இன்றி, எழுபத்தைந்துக்கும் மேற்பட்டோர், சைக்கிளில் சுற்றி வருகின்றனர். இதனால், மூட்டுவலி, முதுகுவலி போன்றவை விலகி விட்டதாக பலர் கூறுகின்றனர். இப்போது, இங்கு சைக்கிள் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !