உள்ளூர் செய்திகள்

கலர் கனவுகள் (கவிதைச் சோலை)

* வானமகள்வெட்கமில்லாமல்மின்னலாய் பல் இளித்துபோனாள்...* வானுயர மாளிகையைகட்டிய தொழிலாளிஒதுங்க இடமின்றிகட்டட செல்வ செழிப்பைபறை சாற்றநட்ட குரோட்டன்ஸ் வகைமரங்களுக்கு இடையேமரமாய் ஒட்டிஅண்ணாந்து பார்த்துதனக்குள் வியந்தான்...இது நான் கட்டியகட்டடமாக்கும்!* குடை பழுது நீக்குபவன்பிறர் மழையில் நனையாமல்இருக்க,தன் வயிறு நனைய...மழையில் நனைந்தபடி குடைபழுது பார்த்துக் கொண்டிருந்தான்...* இங்கே,வேதாந்தம் கூடசுகமாய் உணரப்படும்...எதைக் கொண்டு வந்தாய்இழப்பதற்கு?* இந்த ஒரு வார்த்தைதான்...தாய் மடியாய்,கலர் கலர் கனவுடன்சுகமாய் தூங்க வைக்கிறது!* விடியலில் வேதாந்தம்பசியின் முன்காணாமல் போக,எதுவுமே பெரிதாய்தெரியவில்லை...* உணவையும்...ஆறுதல் தரும்பொய் கனவுகளையும் தவிர!— எஸ்.ஏ.சரவணக்குமார், திருநின்றவூர்.* * *


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !