உள்ளூர் செய்திகள்

பேய் பங்களா!

ஐரோப்பிய நாடான பெலாரசின் தலைநகரம், மினிஸ்க்; இதன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பங்களாவை பார்த்தாலே, அனைவரும், தலைதெறிக்க ஓடுகின்றனர். காரணம், இப்பங்களாவின் சுற்றுச் சுவரில், கற்களுக்கு பதிலாக, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட மனித மண்டை ஓட்டு சிற்பங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.மற்றொரு பக்கமோ, தீயில் கருகிய கைகள், சுவற்றுக்குள் இருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.பாம்பு, பல்லி போன்றவையும், வரையப்பட்டுள்ளன. இதனால், இரவு நேரத்தில், அந்த பங்களா பக்கம் போவதையே, பலரும் தவிர்க்கின்றனர்.இதுகுறித்து, வீட்டு உரிமையாளரிடம் கேட்டால்,'என் வீட்டுப் பக்கம் வருபவர்கள் பயப்படுவதை பார்த்து, ரசிப்பதில், எனக்கு ஒரு சந்தோஷம்; அவ்வளவு தான்...' என்கிறார். — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !