உள்ளூர் செய்திகள்

புல்லாங்குழலின் பிறப்பிடம் எது தெரியுமா?

புல்லாங்குழல் மேதை, பண்டிட் அரி பிரசாத் சவுரசியா, சமீபத்தில், குருவாயூர் கோவிலில் புல்லாங்குழல் கச்சேரி நடத்தினார். அங்கு, திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து, 'நான் அற்புதமாக புல்லாங்குழல் வாசிக்கிறேன் என்கின்றனர். இந்த புல்லாங்குழலை தயாரித்த சிவதாசன், இங்கு இருக்கிறார். அவர் மேடைக்கு வரவும்...' என்ற பண்டிட், அவரை மேடைக்கழைத்து, சிவதாசனின் கைவண்ணத்தை பாராட்டி, கவுரவித்தார்.திரிச்சூர் குன்னங்குளத்தை சேர்ந்த சிவதாசன், கடந்த முப்பது ஆண்டுகளாக, புல்லாங்குழல்களை தயாரித்து வருகிறார். இன்று, இந்தியாவில் உள்ள சிறந்த புல்லாங்குழல் மேதைகளில், அதிகம்பேர், இவருடைய புல்லாங்குழலைத் தான் பயன்படுத்துகின்றனர். இது குறித்து இவர் கூறியது, 'கிறிஸ்துவுக்கு முன், மூன்றாம் நூற்றாண்டில் சீனர்கள் தான், முதன் முதலாக, புல்லாங்குழல் உருவாக்கியதாக தெரிகிறது. வேதங்களிலும், புராணங்களிலும், புல்லாங்குழல்கள் பற்றி கூறப்பட்டாலும், அதன் தயாரிப்பு பற்றி, சிலப்பதிகாரத்தில் மட்டும் தான் கூறப்பட்டுள்ளது...' என்கிறார். முப்பது ஆண்டுகளில், லட்சக்கணக்கான புல்லாங்குழல்களை தயாரித்த இவரும், சிறந்த புல்லாங்குழல் வித்வான் தான்.- ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !