மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தர வேண்டுமா?
பிரிட்டனை சேர்ந்தவர் பிரபல நீச்சல் வீராங்கனை ரெபெக்கா. இவர், 2008ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவர். சமீபத்தில், இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறந்த மூன்றரை வாரத்திலேயே, அந்த குழந்தையை நீச்சல் குளத்துக்கு அழைத்துச் சென்று, நீச்சல் அடிக்க கற்றுக் கொடுத்தார்.அத்துடன் அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த பலரும், 'மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத் தர வேண்டுமா...' என, ஆச்சரியப்பட்டாலும், மற்றொரு தரப்பினரோ, 'விளம்பர வெளிச்சத்துக்காக, பச்சிளம் குழந்தையை வதைத்த ரெபெக்கா மீது வழக்கு தொடர வேண்டும்...' என, போர்க்கொடி தூக்கியுள்ளனர்.— ஜோல்னாபையன்.