உள்ளூர் செய்திகள்

கடலுக்கு அடியிலும் விவசாயம் செய்யலாம்!

இத்தாலியில், சவோனா என்ற பகுதியில், கடலுக்கு அடியில், விவசாயம் செய்யும் முயற்சியை துவக்கியுள்ளனர். கடலுக்கு அடியில், கூண்டுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதற்குள், வெள்ளைப் பூண்டு, கருவேப்பிலை, பீன்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை பயிரிடுகின்றனர். இத்திட்டத்துக்கு, 'நெமோ கார்டன்' என, பெயரிட்டுள்ளனர்.'தண்ணீர் பற்றாக்குறை, சுற்றுச் சூழல் மாசு, மண் வளம் பாதிப்பு போன்ற பிரச்னைகளால், விவசாயம் செய்வதற்கான மாற்று வழியாக, இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, சிறிய அளவில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, விரைவில் விரிவு படுத்தப்படும்...' என்று தெரிவித்துள்ளனர் இத்தாலிய அதிகாரிகள்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !