உள்ளூர் செய்திகள்

தீவிரவாதிகளுக்கு பயந்து...

கடவுளை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கி, எட்டு ஆண்டு, பாகிஸ்தான் சிறையில் வாடிய கிறிஸ்தவ பெண், ஆஸ்யா பீவி. சமீபத்தில் இவர், குற்றமற்றவர் என்று விடுதலையானார். இவருக்கு ஆதரவாக பேசிய, கவர்னர் ஒருவர், பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே காரணத்துக்காக, பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சரும், சுட்டுக் கொல்லப்பட்டார். ஆஸ்யா பீவிக்காக வாதாடிய, வழக்கறிஞர், சைபூல் மலுக், தீவிரவாதிகளுக்கு பயந்து, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள, ஹாலந்து நாட்டுக்கு தப்பி ஓடினார். சிறையிலிருந்து விடுதலையான ஆஸ்யா பீவியும், தலைமறைவாகி விட்டார். இவரும், ஹாலந்து நாட்டுக்கு தான் தப்பி இருப்பார் என, கூறப்படுகிறது.—ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !