இதப்படிங்க முதல்ல.....
அமீர்கானுக்கு சம்பளம் 88கோடி ரூபாய்!சமீபகாலமாய் விளம்பர படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், பாலிவுட் நடிகர் - நடிகைகள். குறிப்பாக, ஷாரூக் கான், சல்மான்கான், அமீர் கான், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் என விளம்பர ஆர்வலர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு கட்டுமான நிறுவனம், 10 கோடி ரூபாய்க்கு கரீனா கபூரையும், மிகப்பெரிய பிராண்டு நிறுவனம், ஒன்று 88 கோடி ரூபாய்க்கு அமீர்கானையும் ஒப்பந்தம் போட்டு வைத்துள்ளனர். — சினிமா பொன்னையாஅனுஷ்காவை டென்ஷன் செய்த டைரக்டர்!தமிழ் சினிமா கைவிட்டதால், மீண்டும் தெலுங்குக்கே சென்று விட்டார் அனுஷ்கா. அங்கிருந்தபடியே தமன்னா, இலியானா பாணியில் பாலிவுட்டில் கால் பதிக்க முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், இந்திப்பட இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்ட போது, இந்தி ரசிகர்களை கவரும் வகையில், உன் முகவெட்டு இல்லை என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விட்டனர். இதனால், மனமொடிந்து போயுள்ளார் அனுஷ்கா. அங்கே போனால் அப்படி; இங்கே வந்தால் இப்படி; ஆகிறது எப்படி? — எலீசாவினய் படத்தை டீலில் விட்ட பிந்து மாதவி!விமலுக்கு ஜோடியாக, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடிப்பதற்கு முன்பே வினய்க்கு ஜோடியாக, இருவர் உள்ளம் படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார் பிந்து மாதவி. ஆனால், 'விமல் படத்துக்கு போக மிச்சம் கால்ஷீட் இருந்தால் தான் வினய் படத்துக்கு தருவேன்...' என்று சொன்ன நடிகை, அதையடுத்து, அதே விமலுடன் தேசிங்கு ராஜா படத்திலும் நடிக்க ஒப்பந்தமானதால், வினய் நடிக்கும் படத்தை டீலில் விட்டுவிட்டார். இதனால், இப்போது பிந்து மாதவியை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு, மும்பை அழகி ஒருவரை, 'புக்' செய்து, இருவர் உள்ளம் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அவரவர் அக்கறைக்கு அவரவர் படுவார்.— எலீசாபின் வாங்கிய நித்யா மேனன்!தெலுங்கில் நானியுடன், நித்யா மேனன் நடித்த படம், ஆலா மொதலைந்தி இப்படத்தை கவுதம் கார்த்தியை வைத்து, தமிழில் ரீ- மேக் செய்கின்றனர். இதையறிந்த நித்யா மேனன், தமிழ்ப்பதிப்பிலும் நடித்து விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்தார். ஆனால், 'தமிழில் கமர்ஷியல் கருதி, கிளாமர் காட்சிகளை சேர்த்துள்ளோம்...' என்று, அப்பட இயக்குனர் ரவி தியாகராஜன் சொல்ல, முயற்சியிலிருந்து பின் வாங்கிவிட்டார் நித்யா மேனன். அதனால், இப்போது புத்தகம், யுவன் படங்களில் நடித்த ரகுல் ப்ரீத்தி சிங், கவுதமுக்கு ஜோடியாகியுள்ளார். அங்கு அங்கு குறுணி அளந்து கொட்டியிருக்கிறது.— எலீசாமாடர்ன் நடிகையாகும் லட்சுமி மேனன்!கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என வரிசையாக வில்லேஜ் கெட்டப்பில் நடித்து வந்த லட்சுமி மேனன். அவர் முதன்முறையாக, கடல் கவுதமுடன், சிப்பாய் படத்தில், மாடர்ன் டிரஸ் அணிந்து வருகிறார். மேலும், இதற்கு முன் நடித்த படங்களில், ஹீரோக்களிடம் நெருக்கம் காட்டாத லட்சுமி மேனன், இப்படத்தில் கவுதமுடன் அதிக நெருக்கமாக நடித்திருப்பதோடு, டூயட் பாடல்களில் செம ஆட்டமும் ஆடியுள்ளார். அலை மோதும் போதே கடலாட வேண்டும்!— எலீசாவிஜய்யின் பாராட்டு!ரஜினி பாணியில், இப்போது விஜய்யும் தன் அபிமானிகள் இயக்கும் படங்களை பார்த்து, பாராட்டத் துவங்கியுள்ளார். அந்த வகையில், தன்னை வைத்து, ப்ரியமுடன், யூத் படங்களை இயக்கிய, வின்சென்ட் செல்வாவை, அவரின் தற்போதைய படமான, துள்ளி விளையாடு படத்தை பார்த்து, வெகுவாக பாராட்டி உள்ளார். விஜய்யின் பாராட்டு, படத்தை வெற்றி பெறச் செய்யும் என்று, காத்திருக்கிறார் வின்சென்ட் செல்வா.— சி.பொ.டி.ராஜேந்தர் போட்ட குத்தாட்டம்!கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரித்த ராம நாராயணன், இப்போது, பவர் ஸ்டாரை நாயகனாக வைத்து, ஒரு படத்தை இயக்கியுள்ளார். தற்போது, அவர் சிறையில் இருந்த போதும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கி விட்டார் ராம நாராயணன். இதற்கிடையே, இப்படத்திற்காக, டி.ராஜேந்தரை வைத்து, ஒரு குத்துப்பாடலை பதிவு செய்துள்ளனர். அப்போது, 'இந்தப் பாடலில் நானே ஆடுகிறேன்...' என்று டி.ஆர்., சொல்ல, சில நடன அழகிகளுடன் டி.ஆரை குத்தாட்டம் ஆட வைத்து படமாக்கியுள்ளனர். சிம்புவே தோற்றுப்போகும் அளவுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார் டி.ஆர்.,— சினிமா பொன்னையா