இதப்படிங்க முதல்ல...
ராம்கோபால் வர்மா தயாரிக்கும் அடுத்த படம்!ரத்த சரித்திரம் படத்திற்கு பிறகு, காயம்-2 என்ற பெயரில், தெலுங்கில் வெளியான ராம்கோபால் வர்மாவின் படம், தற்போது, இவன் சத்ரியன் என்ற பெயரில், தமிழுக்கு, 'டப்' ஆகிறது. ஜெகபதி பாபு நடித்துள்ள இப்படத்தில், நடிகை விமலாராமன் அதிரடி கிளாமர் காட்டி நடித்துள்ளார். முந்தைய படத்தில் தாதாயிசத்தை படமாக்கிய ராம்கோபால் வர்மா, இப்படத்தில் அரசியல்வாதிகளையும், மாணவர்களையும் மோத விட்டுள்ளார். — சினிமா பொன்னையா.அனுஷ்கா நடிக்கும் அதிரடி வேடம்!தமிழில், வானம் படத்தை முடித்துவிட்ட அனுஷ்கா, அடுத்து விக்ரமுடன், பிதா படத்தில் நடிக்கிறார். இதன் பிறகு, மீண்டும், அருந்ததி மாதிரியான ஒரு அதிரடி கதையில், தெலுங்கில் நடிக்கவுள்ள அனுஷ்கா, அப்படத்தில், மாந்திரீகவாதியை வதம் செய்யும் ஆக்ரோஷமான ரோலில் நடிக்கிறார். முன் அளந்த நாழியே பின் அளக்கும்! — எலீசா.டைரக்டர் அமீருக்கு குத்தாட்ட வாய்ப்பு!யுத்தம் செய் படத்தில், 'கன்னீத்தீவு பொண்ணா...' என்ற குத்து பாடலுக்கு ஆடிய டைரக்டர் அமீரை தேடி, மேலும் சில குத்தாட்ட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார் அவர். 'தொடர்ந்து பாடலுக்கு ஆடும் ஐடியா ஏதும் இல்லை. டைரக்டர்களில் சிலர், நான் அந்தப் பாடலில் ஆட வேண்டும் என்று பிரியப்பட்டதால், ஆட நேர்ந்தது...' என்றார். — சி.பொ.,நண்பன் படத்தில் இரண்டு நாயகிகள்!ஷங்கர் இயக்கி வரும், நண்பன் படத்தில், இதுவரை ஒரேயொரு நாயகியாக இலியானா மட்டுமே, 'கமிட்' ஆகி இருந்தார். இப்போது, இன்னொரு நாயகியாக அனுயாவையும் இணைத்துள்ளனர். ஆனால், இவர்கள் இருவரும் எந்த மாதிரி ரோலில் நடிக்கின்றனர் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. — சி.பொ.,கந்தசாமி படத்தில், அனைத்து பாடல்களையும் பாடிய விக்ரம், விஜய் இயக்கத்தில் நடித்து வரும், தெய்வ மகன் படத்திலும் ஒரு பாடல் பாடி உள்ளார். இது, படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் இடம்பெற்றுள்ள பாடல் என்பதால், அந்த டியூனை, சில நாட்கள் பயிற்சி எடுத்த பின்னரே, ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்திருக்கிறார் விக்ரம்.ஜீவா - டாப்ஸி ரொமான்ஸ்!ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்ஸி, அடுத்து ஜீவாவுடன், வந்தான் வென்றான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ரொமான்ஸ் காட்சிகளில், அதிக ஈடுபாட்டுடன் நடித்துள்ளார் டாப்ஸி. இதனால், ஏற்கனவே எழுதிய ஸ்கிரிப்டில் சில திருத்தம் செய்து, ஜீவா - டாப்ஸிக்கிடையே கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகும் காட்சிகளை அதிகப்படுத்தியதோடு, கூடுதல் நெருக்கமாகவும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கண்ணன். மூன்று முழமும் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று! — எலீசா.குத்தாட்ட நடிகையான கீர்த்தி சாவ்லா!படங்களே இல்லாததால், சென்னையை காலி பண்ணி விட்டு, மும்பையில் குடியேற முடிவெடுத்திருந்தார் கீர்த்தி சாவ்லா. அந்த நேரம் பார்த்து, ஏ.வி.எம்., தயாரிக்கும், முதல் இடம் படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடும் சான்சு கிடைக்க, மறுபேச்சின்றி விதார்த்துடன் குத்தாட்டம் ஆடி வந்திருக்கிறார் சாவ்லா. இதன் தொடர்ச்சியாக, மும்பை பயணத்தை ஒத்தி வைத்துள்ள நடிகை, அடுத்தடுத்து மேல்தட்டு நடிகர்களுடன் குத்தாட்டம் போடும் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். கூத்துக்குத் தக்க பந்தம்; காற்றுக்குத் தக்க படல். — எலீசா.பக்தி பாடகர் வீரமணிதாசன், சினிமா பாடகராகிறார்!கடந்த 20 ஆண்டுகளாக, ஆறாயிரம் பக்திப் பாடல்கள் வரை பாடியிருப்பவர் வீரமணிதாசன். இவர், சமீபத்தில், ஏ.வி.எம்.,மின், 175வது படமான, முதல் இடம் படத்தில், டி.இமான் இசையில், 'உய்யா உய்யா உட்டாங்கோ, உசுர வந்து தொட்டாங்கோ...' என்ற பாடலை, முதன் முறையாக பாடி, சினிமா பாடகராகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் தேவா இசையில், பகடை என்ற படத்துக்காகவும் ஒரு தனிப் பாடலை பாடியுள்ள வீரமணி தாசன், தொடர்ந்து அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி, சினிமாவிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்கப் போவதாக சொல்கிறார். — சினிமா பொன்னையா.அவ்ளோதான்