உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

இன்ப அதிர்ச்சியில், ஆண்ட்ரியா!ஆண்ட்ரியா என்றாலே, ஆபாச நடிகை என்றாகி விட்டது. அதனால், அவரை, விஜயின், 64வது படத்தில் நடிக்க அழைத்தபோது, தனக்கு ஏதாவது அசைவ வேடம் தான் தருவர் என்று நினைத்து சென்றிருக்கிறார். ஆனால், ஒரு, 'ஆக் ஷன்' வேடத்தை கொடுத்து, சண்டை பயிற்சி எடுக்குமாறு கூறி விட்டனர். இதனால், இன்ப அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரியா, 'அசைவ நடிகையாக இருந்த என்னை, 'ஆக் ஷன்' நடிகையாக்கி விட்டனர். இனிமேல், எனக்கு நல்ல காலம் தான்...' என்று நண்பர்களிடம் சொல்லி, மகிழ்ச்சியில் பொங்கி பொங்கி அழுகிறார். வரும் விதி வந்தால், வளைந்தாடும் பானையும்!— எலீசாவிஜய்சேதுபதியை பாராட்டிய விஜய்!ரஜினி மற்றும் சிரஞ்சீவி போன்ற சீனியர் நடிகர்களுடன் நடித்த, விஜய்சேதுபதி, தற்போது விஜயுடன் அவரது, 64வது படத்தில், வில்லனாக நடித்து வருகிறார். அதோடு, தன் வில்லன் வேஷம் பேசப்பட வேண்டும் என்பதற்காக, தினமும், 'ஸ்பாட்'டிற்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, வில்லன் தோரணையிலேயே, 'என்ட்ரி' கொடுத்து, 'ஹீரோ' விஜயை, வியப்பில் ஆழ்த்துகிறார். அவரது, 'டெடிகேஷனை' பார்த்த விஜய், 'உங்களது வில்லன் தோற்றமும், நடவடிக்கையும், எனக்குள் வெறியேற்றுவதாக அமைந்துள்ளது. வில்லன் என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும்...' என்று, விஜய்சேதுபதியை பாராட்டி தள்ளுகிறார்.- சினிமா பொன்னையாகாதல் சோகத்தை இசை ஆல்பமாக்கும், ஸ்ருதிஹாசன்!வெளிநாட்டு ஆண் நண்பரை பிரிந்த, ஸ்ருதிஹாசன், 'காதல் தோல்வி என்னை பாதிக்கவில்லை...' என்று பேட்டிகளில் சொன்னாலும், அது, அவரை வாட்டி எடுப்பதை அவரது பேச்சு, அவ்வப்போது வெளிப்படுத்துகிறது. அதனால், வாழ்க்கையில் தன்னை அதிகமாக பாதித்த விஷயங்களை வைத்து, ஒரு சுயசரிதை இசை ஆல்பம் உருவாக்கப் போவதாக சொன்னவர், தன் காதல் பிரிவை பற்றியும், இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார். 'நெஞ்சை உருக்கும் அந்த பாடல், கேட்போரை நிஜமாலுமே உருக வைத்து விடும்...' என்கிறார், ஸ்ருதிஹாசன்.— எலீசாகீர்த்தி சுரேஷ் போடும்,'கண்டிஷன்!'தேசிய விருது பெற்ற, கீர்த்தி சுரேஷின் மார்க்கெட், மறுபடியும் எகிறத் துவங்கியிருக்கிறது. அதோடு, அவரை விட்டு விலகி நின்ற, சில இளவட்டங்கள், அவருடன் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், நடிகையோ, 'யாருடன் வேண்டுமானாலும் நடிக்கிறேன்; ஆனால், கதையின் ஆணி வேர், நானாக தான் இருப்பேன். மொத்த கதையும் என்னை சுற்றியே வரவேண்டும்...' என்று, இயக்குனர்களுக்கு கிடுக்கிப்பிடி போடுகிறார். இதனால், அம்மணியுடன், 'டூயட்' பாடும் ஆசையில் வந்த கதாநாயகர்கள், அவர் போடும் நிபந்தனையை பார்த்து, தெறித்து ஓடுகின்றனர். காணி ஆசை, கோடி கேடு!- எலீசாயோகிபாபுவை உசுப்பேற்றிய, இயக்குனர்கள்!வடிவேலுவின் மார்க்கெட் குடை சாய்ந்து விட்டதால், அவருக்காக, கதை பண்ணி வைத்திருந்த சில இயக்குனர்கள், இப்போது, அந்த கதைகளில் நடிக்க, யோகிபாபுவை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். அதோடு, 'வடிவேலுவின் இடத்தை, உங்களால் தான் நிரப்ப முடியும்...' என்றும், அவரை உசுப்பேற்றுகின்றனர். அதனால், இதுவரை தான் வளர்ந்து வரும் காமெடியன் என்று அடக்கி வாசித்து வந்தவர், இப்போது, 'நானும், வடிவேலுக்கு இணையான காமெடியனாக வளர்ந்து விட்டேன்...' என்று, மார்தட்டி வருகிறார்.- சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!உச்ச நடிகருடன், மூன்றெழுத்து படத்தில், ஜோடி சேர்ந்த அந்த மும்பை நடிகை, மீண்டும் சில மேல் தட்டு நடிகர்களுடன் நடிக்க, கல்லெறிந்து வருகிறார். ஆனால், அப்படி வரும் நடிகை, சில ஆண் நண்பர்களின் அரவணைப்புடன் வருவதால், 'வாய்ப்பு கேட்க வரும்போதே இப்படியென்றால், படப்பிடிப்புக்கு வரும்போது, இன்னும் ஒரு பெரிய படையோடு வந்திறங்குவாரோ...' என்று, அதிர்ந்து போகும் தயாரிப்பாளர்கள், அம்மணியை விரட்டாத குறையாய் வெளியேற்றி வருகின்றனர்.'ஏண்டி ராதிகா... எதிர் வீட்டுக்காரம்மா, தன் குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு, உன்னை மட்டும் தானே அழைச்சாங்க... நீ எதுக்குடி, 10 பிரண்ட்சை சேர்த்துகிட்டு கும்பலா போனே... உங்க கூட்டத்தை பார்த்ததுமே, அவங்க மிரண்டு போயிட்டாங்க. இனி, எதுக்குமே உன்னை கூப்பிட மாட்டாங்க. அதுவும் இல்லாம, என் கூடவும், இனி அந்தம்மா முகம் கொடுத்து பேச மாட்டாங்க. இப்படி பண்ணிட்டியேம்மா...' என்று வருத்தப்பட்டாள், அம்மா. சினி துளிகள்!* ரஜினி நடிக்கும் கடைசி படத்தை, பாகுபலி படத்தை இயக்கிய, ராஜமவுலி இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.* ரஜினியுடன், கபாலி படத்தில் நடித்த, ராதிகாஆப்தே, அரைகுறை ஆடைகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !