உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல.....

ரஜினி, 'ஸ்டைலில்' ராகவா லாரன்ஸ்!

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும், ராகவா லாரன்ஸ், சின்ன வயதில் இருந்தே, ரஜினியின் தீவிரமான ரசிகர். அதனால், தன் படங்களில், அவ்வப்போது அவரது, 'மேனரிசத்தை' வெளிப்படுத்தி வந்தார். இப்போது, ரஜினி படத்தின் இரண்டாம் பாகத்திலேயே நடிப்பதால், 'ரஜினியின் ஒட்டுமொத்த, 'ஸ்டைலை'யும் திரையில் கொண்டு நிறுத்தி, ஏற்கனவே நடித்த பழைய படங்களில், ரசிகர்களை அதிகமாக கவர்ந்த அவரது, 'ஸ்டைலான' நடிப்பையும், இந்த படத்தில் ஆங்காங்கே தெளித்து விடப்போகிறேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையா

ரைசாவை கலாய்த்த, ரசிகர்கள்!

சில நடிகைகளை, ரசிகர்கள் கலாய்த்தால், காண்டாகி விடுவர். ஆனால், நடிகை ரைசாவிடம், 'நீங்கள் என்ன சிக்கன் ரைசா, இல்லை, மட்டன் ரைசா...' என்று, ரசிகர்கள், 'மீம்ஸ்' போட்டு கலாய்த்தபோது, எந்தவித, 'டென்ஷனை'யும் அவர் காட்டவில்லை. மாறாக, 'நான், பிரியாணி ரைஸ் மச்சி...' என்று, 'கூலாக' ஒரு பதில் கொடுத்து, மேற்கொண்டு ரசிகர்கள், தன்னை கலாய்க்காதவாறு, 'ஆப்' பண்ணி விட்டார். இடக்கனுக்கு வழி எங்கே; கிடக்கிறவன் தலை மேல்! — எலீசா

'பாலிவுட்' நடிகையின் குளியல், 'வீடியோ!'

தனுஷ்-, சாய்பல்லவி நடித்த, மாரி -- 2 படத்தின், ரவுடி பேபி பாடல், 'சோஷியல் மீடியா'வில் வெளியிடப்பட்டு, உலக முழுவதும், 80 கோடி பேர் பார்த்துள்ளனர். ஆனால், இந்த சாதனையை, 'பாலிவுட்'டில் வெளியான, சனம் ரே -என்ற படத்தின், ஒரு பாடல் காட்சியில், ஊர்வசி ராட்டிலா என்ற நடிகை, ஆடையில்லாமல் நடித்திருந்த, 'வீடியோ' நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த, 'வீடியோ'வை, 60 கோடி பேர் பார்த்துள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்த குளியல், 'வீடியோ'விற்கு கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, 'விரைவில், தனுஷ், -சாய்பல்லவியின் சாதனையை, இந்த, 'பாலிவுட்' நடிகை முறியடித்து விடுவார்...' என்கின்றனர். இட்டு பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு!— எலீசா

காதல் எபிசோடை, 'ரிப்பீட்' செய்த, நயன்தாரா!

சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து பிரிந்த, நயன்தாரா, தற்போது, இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து வருகிறார். மேலும், இரண்டு முறை, காதலர்களை பிரிந்தபோது, அதற்கான காரணத்தை மூடி மறைத்து வைத்திருந்த, நயன்தாரா, நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது, அதுகுறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், 'நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது; அதேபோல், நம்பிக்கை இல்லாதவர்களுடன் வாழ்வதை விட, தனித்து வாழ்வதே மேல். அதனால் தான், அந்த இரண்டு காதலர்களையும் நான் புறக்கணித்தேன்...' என்று, மனம் திறந்துள்ளார். பட்டவர்கள் பதத்தில் இருப்பர்!— எலீசா

டிராக்கை மாற்றும் சிவகார்த்திகேயன்!

ஒரே மொழி சினிமாவை நம்பிக்கொண்டிருக்க வேண்டாம் என்று, பரவலாக பல மொழிகளிலும் நடித்து வருகிறார், விஜய்சேதுபதி. அவரைத் தொடர்ந்து, அவரது சம காலத்து நடிகரான, சிவகார்த்திகேயனும், தற்போது, தெலுங்கில், பவன் கல்யாண் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க, பேசி வருகிறார். ஆனால், விஜய்சேதுபதியை போன்று, 'நெகடீவ்' வேடங்களில் நடிக்காமல், இன்னொரு, 'ஹீரோ' போன்ற, 'பாசிட்டீவ்' வேடங்களில் நடிப்பதற்கே ஒப்புதல் கொடுத்து வருகிறார், சிவகார்த்திகேயன்.— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும், சந்திரமுகி நடிகை, சமீபத்தில், மத ரீதியிலான கருத்து சொல்லி, சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். ஆனபோதும், அதற்கு சில உதாரணங்களை சொல்லி, அவர் தரப்பினர் கருத்தை நியாயப்படுத்தி, எதிர்ப்பாளர்களை அடக்கினர். அதேசமயம், இந்த விவகாரத்தால், தன் படங்கள், திரைக்கு வரும்போது, தியேட்டர்கள் முன் கலாட்டாவில் ஈடுபட்டு, படத்தை ஓட விடாமல் செய்து விடுவரோ என்ற அச்சம், நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், இனிமேல், தான் நடிக்கும் படங்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு, மார்க்கெட்டை, 'ஸ்டெடி' பண்ணிக்கொள்ள வேண்டும் என்று, மாற்று யோசனையில் இறங்கியிருக்கிறார், நடிகை.தோழியர் இருவர் பேசிக் கொண்டது:'எதிர் வீட்டு அக்காவோட, புது மருமகள் ஜோதி, எதற்கெடுத்தாலும், மாமியார் வீட்டை பற்றி குறை சொல்லிட்டே இருக்காளாம்...''ஏன்... என்ன ஆச்சு?''போன வாரம் அந்த அக்கா, குல தெய்வ கோவிலுக்கு, குடும்பத்தோடு போயிருக்காங்க. அங்கேயும், அவங்க வழக்கத்தை விமர்சித்திருக்கிறார், அந்த பெண். இதனால், அந்த அக்கா ரொம்பவே வருத்தப்பட்டு, என்னிடம் புலம்பிட்டு போறாங்க...'

சினி துளிகள்!

ஒரே ஒரு கதை சொன்னால், ஜோதிகாவை, அத்தனை எளிதில் திருப்திபடுத்த முடியாது என்பதால், கதை சொல்லும் இயக்குனர்கள், பல கதைகளை கைவசம் வைத்தபடி, அவரை சந்திக்கின்றனர்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !