இதப்படிங்க முதல்ல...
விஷாலின் அரசியல் ஆசை!கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்தார், விஷால். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அரசியல் ஆசை அவரை விடாமல் துரத்தி வந்தது. தற்போது, ஆந்திர மாநில தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து, அங்குள்ள, சித்துார் தொகுதியில் போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.— சினிமா பொன்னையாரம்யா கிருஷ்ணனுக்கு, ரஜினி சிபாரிசு!ஏற்கனவே, படையப்பா படத்தில், நீலாம்பரி என்ற வில்லி வேடத்தில் நடித்து, அதிர விட்டவர் தான், ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில், ரஜினி நடித்து வரும், ஜெயிலர் படத்திலும், முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் அவர் நடித்து வருகிறார்.அதோடு, படையப்பா படத்தில், 'வயசானாலும், உன்னோட அழகும், ஸ்டைலும், இன்னும் ஒன்னை விட்டு போகல...' என்று, ரம்யா கிருஷ்ணன் பேசிய, 'டயலாக்' பெரிய அளவில், 'ரீச்' ஆனதால், ஜெயிலர் படத்திலும், அவருக்கு இரண்டு, மாஸான, 'பஞ்ச் டயலாக்'கை கொடுத்துள்ளனர்.குறிப்பாக, 'ரம்யா கிருஷ்ணனின் அழுத்தமான கதாபாத்திரத்திற்கு ஏற்ப, 'பஞ்ச் டயலாக்' கொடுக்க வேண்டும். அப்போது தான், அந்த வேடம், 'கெத்'தாக இருக்கும்...' என்று, இயக்குனரை வலியுறுத்தி இருக்கிறார், ரஜினி.சி.பொ.,விஜயை மிரள வைத்த, ராஷ்மிகா!கன்னட நடிகையான, ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தியில், முன்னணி நடிகை ஆகி விட்டார். வாரிசு படத்தில், ஒரு கலக்கலான, 'கிளாமர் ஹீரோயின்' வேடத்தை ஏற்றுள்ள, ராஷ்மிகா மந்தனா, பாடல் மட்டுமின்றி, 'ரொமான்டிக்' காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.குறிப்பாக, எத்தனையோ நடிகையருடன், 'ரொமான்ஸ்' செய்து விட்ட விஜய், சில காட்சிகளில், ராஷ்மிகாவின், குறும்புத்தனமான, துாக்கலான நடிப்பை பார்த்து, பாராட்டி உள்ளார்.அதோடு, 'இந்த படத்திற்கு பின், தமிழ் சினிமா, உன்னை தலையில் துாக்கி வைத்து கொண்டாடப் போகிறது. அந்த அளவுக்கு, உனக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகும்...' என்று கூறியிருக்கிறார்.விஜயின் இந்த உற்சாகமான வார்த்தை காரணமாக, 'தெலுங்கு, ஹிந்தியை தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும், என் கொடி பறக்க போகிறது...' என்று, சக நடிகையரிடம் கூறி வருகிறார், ராஷ்மிகா.— எலீசாநயன்தாராவுக்கு, 'ஷாக்' கொடுத்த, இயக்குனர்கள்!நாயன்தாரா நாயகியாக நடித்த, கனெக்ட் படம் பற்றி, கலவையான விமர்சனம் எழுந்தது. அதையடுத்து, அவரிடம் கதை சொல்லி, காத்திருந்த சில இயக்குனர்கள், தற்போது, அந்த கதைகளில் வேறு நடிகையரை நடிக்க வைக்க துவங்கி விட்டனர்.குறிப்பாக, நயன்தாராவை வைத்து, அறம் படத்தை இயக்கிய, கோபி நயினார், அவரிடத்தில், மனுஷி என்ற ஒரு கதையை சொல்லி இருந்தார். தற்போது, அந்த கதையை, ஆண்ட்ரியாவிடம் சொல்லி, அவரை வைத்து அப்படத்தை துவங்கி விட்டார். இதே போல், இன்னும் சில இயக்குனர்களும், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட சில நடிகையரிடம் கதையை சொல்லி, படமாக்கும் முயற்சியில் இறங்கி விட்டனர். தனக்காக காத்திருந்த இயக்குனர்கள், இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வேறு நடிகையரை தேடி ஓட்டம் பிடித்து விட்டதால், பலத்த அதிர்ச்சியில் உள்ளார், நயன்தாரா.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* காக்கா முட்டை நடிகை, சொப்பன சுந்தரி ஆக களமிறங்கும் அந்த படத்தில், குளியலறை காட்சி மட்டுமின்றி, சில பலான காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம். அதனால், இந்த படத்தில் நடிப்பதற்கு பல நடிகையர் மறுத்து விட்ட நிலையில், காக்கா முட்டையோ ஒரு சவாலாக நடித்துக் கொண்டிருக்கிறார்.ஆனால், அவர் நடிக்கும் சில விவகாரமான காட்சிகள் கோலிவுட்டில், 'லீக்' ஆனதால், அடுத்த, ஷகிலா உருவாகி வருவதாக கூறி வருகின்றனர். அதைக்கேட்ட மேற்படி நடிகையோ, 'இந்த படத்தில், என், 'பர்பாமென்சு'க்கு தேசிய விருதே கிடைக்கப் போகிறது. நீங்கள் எல்லாம் என்னை கண்டபடி விமர்சிக்கும் அளவுக்கு, நான் மோசமான நடிகையாகி விட மாட்டேன்...' என்று, தன்னை விமர்சிப்பவர்களை நோக்கி சீறிப் பாய்கிறார்.* தான் இயக்கும் எந்த ஒரு படமாக இருந்தாலும், ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட கூடுதலாகவே, தயாரிப்பாளர்களுக்கு செலவை ஏற்படுத்துவார், பிரமாண்டம். அப்படித்தான் தெலுங்கு, வாரிசு நடிகரை வைத்து, அவர் இயக்கி வரும் படத்தின் பட்ஜெட்டை எகிற வைத்து விட்டதால், தயாரிப்பாளருக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஆரம்பத்தில் கொடுத்த பட்ஜெட்டை விட, அதிகமாக ஆகும் மொத்த செலவையும் தன் கையில் இருந்தே போட்டு படமாக்குவதாக சொல்லி தயாரிப்பாளரின் கோபத்தை தணித்துள்ளார், பிரமாண்டம்.ஆனால், தயாரிப்பாளரோ, 'படம், பெரிய அளவில் லாபத்தை கொடுத்தால் மட்டுமே, நீங்கள் போட்ட பணத்தை திருப்பி கொடுப்பேன். இல்லையென்றால், தம்படி காசு தர மாட்டேன்...' என்று, பிரமாண்டத்துக்கு, மெகா அதிர்ச்சி கொடுத்து விட்டாராம். சினி துளிகள்!* சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், 'வெப்சீரியல்'களில் அதிகமாக நடிக்க துவங்கி இருக்கிறார், அஞ்சலி.* கமல் நடிக்கும், இந்தியன்- 2 மற்றும் ராம் சரண் நடிக்கும், ஆர்சி-15 என, இரண்டு படங்களையும், ஒரே நேரத்தில், மாறி மாறி இயக்கி வருகிறார், இயக்குனர் ஷங்கர்.* கடந்த, 1990-களில், கவர்ச்சி நடிகையாக வலம் வந்த, சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தில், ஒரு படத்தில் நடிக்கப் போகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.அவ்ளோதான்!