இதப்படிங்க முதல்ல...
பாலிவுட் நடிகையானார், கங்கனா ரணாவத்!ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதையில் உருவான, தலைவி படத்தில் நடித்த, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திற்கு, அந்த படம் தோல்வியாக அமைந்தது. இருப்பினும், அவரது நடிப்பு திறமைக்கு, கோலிவுட்டில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது, சந்திரமுகி - 2 படத்தை அடுத்து, மாதவனுடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்.'இப்படி அடுத்தடுத்து எனக்கு, கோலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. எனவே, பாலிவுட்டை போலவே, கோலிவுட் படங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, அதிரடியான சரித்திர கதைகளில் நடிப்பதில் தான் அதிக ஆர்வமாக இருக்கிறேன்...' என, கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார்.— சினிமா பொன்னையா'ஆக்ஷனு'க்கு மாறும் மாளவிகா மோகனன்!தற்போது, ஹிந்தியில், உத்ரா படத்தில், 'ஆக் ஷன்' கதையில் நடித்து வரும், மாளவிகா மோகனன், தமிழில், விக்ரமுடன் நடித்து வரும், தங்கலான் படத்திலும், 'ஆக் ஷன்' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.'தங்கலான் படத்தில், நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ரோலிங், ஜம்ப்ஸ், கிக்ஸ் என, பல கலைகளை கற்று நடித்து வருவதோடு, சிலம்பாட்டத்தை மையமாகக் கொண்ட அதிரடி சண்டை காட்சியில் நடித்திருக்கிறேன்.'அது, என்னை பாலிவுட் வரை பேச வைக்கும். அந்த வகையில், இதுவரை கவர்ச்சி, 'ஹீரோயினி' ஆக என்னை பார்த்து வந்த திரையுலகின் கண்ணோட்டம், இனிமேல் மாறப் போகிறது...' என்கிறார், மாளவிகா.எலீசாகல்லெறியும், தமன்னா!சில ஆண்டுகளாக, தமிழில் பட வாய்ப்பு இல்லாமலிருந்த, தமன்னா, தற்போது, ஜெயிலர், மற்றும் அரண்மனை - 4 போன்ற படங்களில் நடித்து வருகிறார். கடந்த, 2010ல், கார்த்தியுடன் இணைந்து, தமன்னா நடித்த, பையா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார், லிங்குசாமி. மீண்டும், கார்த்திக்கே நாயகனாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், தமன்னாவுக்கு இதுவரை அழைப்பு இல்லையாம். அதனால், மேற்படி படக் குழுவை அணுகி, 'முதல் பாகத்தில் நடித்த என்னை தான், இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க வேண்டும்...' என்று, உரிமை பிரச்னையை எழுப்பி வரும் தமன்னா, தன் உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.— எலீசாரஜினியுடன் மோதும் அர்ஜூன்!இரும்புத்திரை படத்தில், வில்லனாக நடித்த, அர்ஜுன், தற்போது, விஜயின், லியோ படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, ரஜினி நடிக்கும், 170-வது படத்திலும், வில்லனாக நடிக்கப் போகிறார்.இதன் காரணமாக, எஸ்.ஜே.சூர்யா, பகத் பாசிலை அணுகிய இயக்குனர்கள் எல்லாம், தற்போது, அர்ஜுன் பக்கம் திரும்பி இருக்கின்றனர். இதனால், கடந்த காலங்களில் கொடூரமான வில்லனாக நடிக்க மாட்டேன் என, நிபந்தனை போட்டு வந்த அர்ஜுன், தற்போது, அதை காற்றில் பறக்க விட்டுள்ளார்.'எந்த மாதிரியான வில்லன் வேடம் என்றாலும், நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்...' என, கோலிவுட்டில் தகவல் வெளியிட்டுள்ளார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!கணவரை விவாகரத்து செய்துவிட்ட, பாணா காத்தாடி நடிகை, சில காலம், 'பாய் பிரண்டு'களுடன் ஊர் சுற்றுவதை தவிர்த்து வந்தார். தற்போது, தெலுங்கில் தான் ஜோடி சேர்ந்துள்ள, குஷி நடிகருடன், அடிக்கடி வெளிநாடுகளுக்கு, 'ஜாலி டூர்' அடிக்கிறார். அதோடு, அங்கு சென்று, இருவரும் குடி கும்மாளம் என்று, செம கூத்தடிக்கின்றனராம். இந்த சேதியறிந்து, கடந்த சில ஆண்டுகளாக, பாணா காத்தாடி நடிகையை விட்டு விலகி நின்ற அவரது, 'மாஜி பாய் பிரண்டு'கள் மீண்டும், அவருடன் தங்களது பழைய, 'பிரண்ட்ஷிப்'பை தொடர தயாராகி விட்டதோடு, அம்மணிக்கு துாது விடும் படலத்தை துவங்கியுள்ளனர்.சினி துளிகள்!* பிரபுதேவா நடிக்கும், பேட்ட ராப் படத்தில், அவருக்கு ஜோடியாக, வேதிகா நடிக்கிறார். இந்த படத்தை, எஸ்.ஜே.சினு என்ற, மலையாள இயக்குனர் இயக்குகிறார்.* தமிழில், சுல்தான் மற்றும் வாரிசு படங்களில் நடித்த, ராஷ்மிகா மந்தனா, தற்போது, ரெயின்போ என்ற படத்தில், கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.* குஷி படத்தில் நடித்து முடித்ததும், சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார், சமந்தா.* தன், 21வது படத்தில், ராணுவ வீரராக நடிக்கிறார், சிவகார்த்திகேயன். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது, காஷ்மீரில் நடந்து வருகிறது.அவ்ளோதான்!