இதப்படிங்க முதல்ல...
ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன்!சிறு வயதிலிருந்தே, ரஜினியின் தீவிரமான ரசிகரான சிவகார்த்திகேயன், அவருடன், ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். அதன் காரணமாக ரஜினியின், ஜெயிலர் படத்தில், சிறிய வேடத்தில் நடிக்க முடிவெடுத்தார்.ஆனால், 'சினிமாவில், முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, இதுபோன்ற சிறிய வேடத்தில் நடித்தால், 'ஹீரோ இமேஜ்' பாதிக்கும்...' என்று, அதில் நடிக்க, தடை போட்டார், ரஜினி.அடுத்தபடியாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும், 171வது படத்தில், எப்படியாவது, ரஜினியுடன் இணைந்து நடித்து விட வேண்டும் என, பேச்சு நடத்தியுள்ளார், சிவகார்த்திகேயன்.—சினிமா பொன்னையாபுடவைக்கு மாறிய, ராஷ்மிகா மந்தனா!இதுவரை, தான் நடித்த படங்களின், 'புரமோஷன்' மற்றும் திரைப்பட விழாக்களுக்கு படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்து, அனைவரையும் கிறங்கடித்தார், ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில், தன் முகத்தை, மற்றொரு ஆபாச நடிகையின் உடலுடன் இணைத்து, 'டீப் பேக்' வீடியோ, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்ட பின், ஆளே மாறி விட்டார்.குறிப்பாக, தான் நடித்த படங்களின், 'புரமோஷன்' நிகழ்ச்சிகளுக்கு புடவை, 'கெட் - அப்'பில் வரும், ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பு தளங்களுக்கு கூட, பெரும்பாலான நாட்களில் புடவை அணிந்தே, 'விசிட்' அடிக்கிறார்.தன் மீது விழுந்திருக்கும், 'கிளாமர்' நடிகை என்ற, 'இமேஜை' மாற்றவே, இந்த முயற்சியில் தான் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார்.எலீசாசொல்லி அடிக்கும், பிரியங்கா மோகன்!தமிழில் நடித்த, டான் மற்றும் தற்போது, தனுஷுடன் நடித்துள்ள, கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்திருக்கும், பிரியங்கா மோகன், தெலுங்கில், நானி உடன், ஒரு படத்தில் தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறார்.இதற்கு முன், தெலுங்கில் நடிப்பதற்கு, குறைவான படக்கூலியே பெற்று வந்தவர், தற்போது, தமிழ் சினிமாவில் தனக்கிருக்கும் மார்க்கெட்டை முன் வைத்து, ஐந்து கோடி ரூபாய் பேசி இருக்கிறார்.மேலும், தான் கேட்ட சம்பளத்தை மறுப்பு சொல்லாமல் கொடுப்பதற்கு தயாரிப்பாளர் முன் வந்திருப்பதால், அடுத்து தமிழில் ஒப்பந்தமாகும் புதிய படங்களில் நடிக்க, இன்னும் சில கோடிகளை சொல்லி அடிக்கவும் திட்டமிட்டுள்ளார், பிரியங்கா மோகன்.எலீசாமீண்டும் ஹிந்திக்கு செல்லும், கமலஹாசன்!தற்போது, இந்தியன் - 2 படத்தை அடுத்து, மணிரத்னம் இயக்கும், தக் லைப், எச்.வினோத் இயக்கும், தன், 232வது படம் மற்றும் பிரபாசுடன் ஒரு படம் என, மூன்று மெகா படங்களில் நடித்து வருகிறார், கமலஹாசன்.அடுத்தபடியாக, ஷாருக்கானுடன் இணைந்து, ஒரு ஹிந்தி படத்திலும் நடிக்கப் போகிறார். பிரபாசுடனான படத்தில், வில்லனாக நடிக்கும் கமல்ஹாசன், ஷாருக்கானுடன் இணையும் படத்தில், இன்னொரு, 'ஹீரோ'வாக நடிக்கப் போகிறார். இந்த படம், பிரமாண்டமான, பான் இந்தியா படமாக உருவாகப் போகிறது.சினிமா பொன்னையாகறுப்பு பூனை!ஏற்கனவே ஓரிரு படங்களில், வில்லனாக நடித்த, ரோஜா நாயகன், அதையடுத்து, 'ஹீரோ'வாக மட்டுமே நடிப்பேன் என்று, கூறி வந்தார். ஆனால், அப்படி தான் நடித்த படங்கள் எல்லாம், 'பிளாப்' ஆகி விட்டதால், மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். இருப்பினும், 'ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு கொடுக்கும் அதே படக் கூலியை, வில்லனாக நடிப்பதற்கும் கொடுக்க வேண்டும். வில்லன் என்பதற்காக, படக்கூலியை குறைப்பதை அனுமதிக்க மாட்டேன். 'அதுமட்டுமின்றி, வில்லனுக்கும் ஒரு ஜோடி இருக்க வேண்டும். அப்போது தான், 'ஹீரோ இமேஜை' நான் கட்டிக் காக்க முடியும்...' என்று, கோலிவுட்டில் யாரும் சொல்லாத, நிபந்தனை எல்லாம் போட்டு, இயக்குனர்களுக்கு பெரும், 'ஷாக்' கொடுத்துள்ளார், ரோஜா நாயகன்.இரண்டாம் தட்டு, 'ஹீரோ'களுக்கு ஜோடியாக நடித்து வரும், மலையாள வாரிசு நடிகையை, சில இயக்குனர்கள், இரண்டாம் பட்ச, 'ஹீரோயினி'யாக பயன்படுத்த துவங்கினர். இதனால், அதிர்ச்சி அடைந்த அம்மணி, தற்போது, 'ஹீரோ'களின் தயவை நாட துவங்கி இருக்கிறார். முன்பெல்லாம், 'நான் மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகள்...' என்று ஏகப்பட்ட, 'பில்ட் - அப்'களை கொடுத்து வந்தார். தற்போது, 'ஹீரோ'களுடன் அனுசரணையான போக்கை கடைப்பிடித்து வருவதோடு, அடுத்த ரவுண்டுக்கு, அழுத்தமான அஸ்திவாரத்தை போடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.சினி துளிகள்!* தனுஷ் நடிக்க இருக்கும் இளையராஜாவின், வாழ்க்கை வரலாறு படத்தில், தன்னைப் பற்றி வெளியில் தெரியாத, சில அரிய தகவல்களை சொல்லி, அந்த கதைக்கு, புதிய வடிவம் கொடுக்கப் போவதாக கூறுகிறார், இளையராஜா.* ஜெயம் ரவி நடித்த, தனி ஒருவன் படத்தில், ஏற்கனவே வில்லனாக நடித்த, அரவிந்த்சாமி, தற்போது, கார்த்தி நடிக்கும், புதிய படத்திலும், வில்லனாக நடிக்கப் போகிறார்.* கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில், ஒருவரையொருவர் எதிர்த்து பழிவாங்கும் கதையில், 'வெப்' தொடர், தயாராகி வருகிறது.அவ்ளோதான்!