உள்ளூர் செய்திகள்

குதிராம் போஸ்!

நம் நாட்டில், வெள்ளையர்களின் ஆட்சி இருந்தபோது, அவர்களின் குடியிருப்பு பகுதிகளை இந்தியர்கள் கடந்து செல்ல வேண்டுமென்றால், தரையில் கைகளை ஊன்றி, தவழ்ந்து செல்ல வேண்டும். அப்படி யாரேனும் அலட்சியமாக நடந்து சென்றால், அவர்களுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படும். இதுதான், வெள்ளையர் கால சட்டம்.பதினாறு வயது சிறுவன் ஒருவன், தன் சித்தியோடு சென்றபோது, ஓர் இந்தியர், கைகளை ஊன்றி, நாயைப் போல் செல்வதை பார்த்தவன், கோபம் கொண்டு, துணிச்சலாக மேடையேறி, எதிர்ப்பு குரல் கொடுத்தான். அதை பார்த்த ஆங்கிலேயர், அவனை கைது செய்து, துாக்கு தண்டனை விதித்தனர்.அவன் இறப்பதற்கு முன், தன் சித்திக்கு கடிதம் எழுதினான். அதில், 'நான் சாவதற்கு அஞ்சவில்லை; உனக்கு குழந்தை பிறக்கும். பிறந்ததும், அந்த குழந்தையின் கழுத்தை தடவிப் பார். அதில், துாக்குக் கயிற்றின் அடையாளம் இருக்கும்; நானே திரும்ப வந்து பிறப்பேன்...' என்று அந்த கடிதம் நீண்டிருந்தது. அந்த சிறுவனின் பெயர், குதிராம் போஸ்; இந்திய சுதந்திரத்திற்காக, சிறு வயதில் துாக்கில் தொங்கிய குதிராம் போஸின் வரலாறு எத்தனை இந்தியர்களுக்கு தெரியும்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !