உள்ளூர் செய்திகள்

பத்து வயதிலேயே பிரபலமானவர்!

தற்சமயம், 37வயதாகும் ஹாலிவுட் நடிகை, ட்ரு பாரி மூர் தன்னுடைய பத்தாவது வயதிலேயே, பிரபலமாகி விட்டார். பத்து வயது சிறுமியாக இருந்த போதே, இரவு, 'கிளப்'புகளுக்கு சென்று மது அருந்தி, புகை பிடித்து பிரபலமானார். 17 வயதில் முழு நிர்வாணமாக நின்று, போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்படம், 'ப்ளே பாய்' பத்திரிகையில் வெளிவந்த போது, அவரது புகழ் மேலும் உயர்ந்தது. தற்போது, 45 முதல் 55 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இவர், டைரக்ஷன் துறையிலும் குதித்து விட்டார். சிறு வயதிலேயே குடிக்கு அடிமையானதை விவரித்து சுயசரிதை எழுதிய போது அவருக்கு, 15 வயது தான். 20வது வயதிலேயே, சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தவர், இன்று அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !