இப்படி சாப்பிட்டால், கொரோனா வராதா?
பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, தற்போதைய இளைஞர்கள் முட்டாள்தனமாக எதையாவது செய்து, வம்பை விலை கொடுத்து வாங்குவது, உலகம் முழுவதும் அதிகமாகி விட்டது. அதிலும், சமூக வலைதளங்களின் வருகைக்குப் பின், இந்த கூத்து ரொம்பவே அதிகமாகி விட்டது. கிழக்காசிய நாடான தென் கொரியாவை சேர்ந்த இளம் பெண், ஸ்சொயங். எதையாவது வித்தியாசமாக செய்து, அதை, 'யு டியூபில்' பதிவிடுவது, இவரது வழக்கம். சமீபத்தில், ஆக்டோபாஸ், இறால் போன்ற கடல் வாழ் உயிரினங்களை உயிருடன் சாப்பிட்டு, அதை, 'வீடியோ'வாக பதிவு செய்து, 'யு டியூபில்' வெளியிட்டார். பாராட்டுக்கு பதிலாக, அவருக்கு கடும் விமர்சனங்கள் தான் பரிசாக கிடைத்தன. 'கண்ணில் படும் விலங்குகளை எல்லாம், உயிருடன் சாப்பிட்டால், 'கொரோனா' போன்ற தொற்று நோய்கள் வரத்தான் செய்யும். இந்த பெண் மீது நடவடிக்கை எடுங்கள்...' என, தென் கொரியா முழுவதும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.— ஜோல்னாபையன்