உள்ளூர் செய்திகள்

பால் அருந்துவது நல்லதா?

ஜூன் 1 சர்வ தேச பால் தினம்நம் அன்றாட வாழ்வில் மிக முக்கிய உணவுப் பொருள், பால். பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்தே, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதியை, உலக பால் தினமாக அறிவித்தது.உலகளாவிய பிரதான உணவான பாலில், தண்ணீர், புரதங்கள், தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் 'லாக்டோஸ்' போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. பற்கள் மற்றும் எலும்புகளை வலிமைப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் என, பல பயன்களும் உள்ளன.கனடா பிராக் பல்கலைக்கழகத்தின், இணை பேராசிரியரான ராய் என்பவர், பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுவதாக, ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளார்.இதைப் போன்றே, இன்னொரு பல்கலைக்கழக பேராசிரியர், பீட்டர் எல்விஸ் என்பவர், பால் பருகுவதால், பக்கவாதம், நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற பிரச்னையால், இறப்பவர்களின் எண்ணிக்கை, 15 முதல் 20 சதவீதம் குறைந்திருப்பதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளார்.இது ஒருபுறம் இருக்க, பல ஆய்வுகள், பாலை அதிகம் பருகுவதால், எலும்பு முறிவு, இதய நோய், நீரிழிவு நோய், 'அல்சைமர்' எனப்படும் ஞாபகமறதி நோய், புற்றுநோய் ஏற்படுவதாகவும் கூறியுள்ளன.மேலும், பாலாக பருகாமல், புளித்த தயிர், வெண்ணெய் போன்ற, பாலின் பொருட்களாக எடுத்துக் கொண்டால், அதனால் வரும் அபாயங்கள், 10 முதல் 20 சதவீதம் வரை குறைவதாகவும் கூறியுள்ளன.தற்போதைய கால கட்டத்தில், கொழுப்பு சத்து நிறைந்த பால், கொழுப்பு சத்து நீக்கிய பால், கொழுப்பு சத்து குறைந்த அளவுடைய பால் என, பல வகைகளில் விற்பனை மாறியுள்ளது.இதையடுத்து, உலக சுகாதார மையம், 'ஒரு நாளைக்கு, 300 - 750 மி.லி., பால் பருகுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு சிறந்தது...' என, குறிப்பிட்டுள்ளது.மனித இனம் மட்டுமே, மற்ற விலங்குகளின் பாலை, தங்களின் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டுள்ளது. ஏனெனில், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில், மிக முக்கிய உணவுப்பொருள், பால்.எனவே, பாலின் தனித்துவத்தை உணர்ந்து, பதப்படுத்தப்பட்ட பாலாக இருந்தாலும், நன்கு காய்ச்சி, நம் உடலின் ஜீரண சக்திக்கு ஏற்ற அளவு எடுத்துக் கொள்ளலாம். ஆர்.திவ்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !