உள்ளூர் செய்திகள்

மட்டாஞ்சேரியில் குடியேறிய யூதர்கள்!

கொச்சி, மட்டாஞ்சேரிக்கு, ஒரு தனி சிறப்பு இருக்கிறது. இங்கு, யூத இன மக்கள் வாழ்கின்றனர். கி.மு., 605ல், பெர்ஷிய மன்னரால் நாடு கடத்தப்பட்ட, பத்து, யூத குடும்பத்தினர், கேரளா கொடுங்கல்லூரில் குடியேறினர். பின், பாபிலோன் மற்றும் ஜெருசலேமில் இருந்தும், பல யூத குடும்பங்கள், கேரளாவில் குடியேறினர். இவர்கள், அப்போது, அப்பகுதியை ஆண்டு வந்த, மன்னரின் விருந்தினர்களாக போற்றப்பட்டனர். மட்டாஞ் சேரியில் தங்க வைத்து, அவர் களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கினார் மன்னர். கேரளாவில், முதல் முதலாக, 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்' நிறுவியதும், யூதர் ஒருவர் தான். இந்த கடையில், மது விற்பனை செய்யும் அனுமதியும், மன்னரால் வழங்கப்பட்டது. இன்று, நிலைமை மாறி, பல குடும்பங்கள், இஸ்ரேல் நாட்டுக்கு திரும்பி விட்டனர். ஆனால், ஒரு சிலர் மட்டும் மட்டாஞ்சேரியை விட்டு போக மனமின்றி, அங்கேயே தங்கி உள்ளனர். சாமுவேல் ஹலேகுவா என்ற முதியவர், மட்டாஞ்சேரியை மிகவும் நேசிக்கிறார். 'இறுதி வரை இங்கேயே இருப்பேன். இந்த மண்ணில் கலந்து விடுவேன்...' என்கிறார்.- ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !