உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - பூரணமாய் ஒரு வாழ்க்கை

கண்டால் முகம் சுளிக்கும்கம்பளி பூச்சி பருவத்தைகடந்த பிறகு தான்வண்ணங்கள் நிரம்பியவாழ்வு கிடைக்கிறதுபட்டாம் பூச்சிக்கு!பாசி படர்ந்தசகதியைசங்கடமென்று கருதுவதில்லைகுளத்துக்கு நடுவேபூத்துச் சிரிக்கும் தாமரை!பல நாட்கள்காத்திருப்பிற்கு பிறகேமுத்து சாத்தியமாகிறதுசிப்பிக்கு!துளித் துளியாய் வீழ்வதற்குகவலை கொண்டால்துள்ளியோடும் குளிர் நதியாய்எப்படி மாறுவாள் மழையரசி!கடினங்கள், கசப்புகள்காத்திருத்தல்கள், சவால்கள்யாவற்றையும் கடந்து தான்ஒளி வீசிக்கொண்டிருக்கிறதுபூரணமாய் ஒரு வாழ்க்கை!இ.எஸ்.லலிதாமதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !