கிச்சன் டிப்ஸ்!
'கேக்' செய்யும் முன், 'பேகிங் ஓவன்' தட்டில் சரியான அளவு நெய் அல்லது எண்ணெய் பூசப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்* 'கேக்'குக்கு மிருதுத் தன்மையும், மணமும் கிடைக்க, ஆரஞ்சுப் பழச்சாறு சேர்க்கலாம்* 'கேக்'கை, 'பேக்' செய்யும் போது, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே, 'பேகிங் ஓவனை' திறக்காதீர்* 'கேக்' செய்ய தேவையான பொருட்களை தனித்தனியே அளந்து வைத்து, பிறகு தயாரிக்கலாம்* 'கேக்'குகளை பெரிய டின்களில் வைத்து, அத்துடன் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால், நீண்ட நாள் கெடாமல் இருக்கும்* முந்திரி பருப்பு, பாதாம் ஆகியவற்றை பாலில் ஊற வைத்து சேர்த்தால், உதிர்ந்து விழாது.