இளமையின் ரகசியம், சிரிப்பு தான்!
படத்தில் உள்ளவர் பெயர், த்ரெசியம்மா. வயது: 84. கேரள மாநிலம், கோதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு, சிறு வயதிலேயே திருமணமானது.மருத்துவமனைக்கு செல்லாமலும், எந்தவித மருத்துவ உதவியும் இல்லாமலே, 15 குழந்தைகளை பெற்றுள்ளார். அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். அத்தனை பேருக்கும் திருமணம் செய்து வைத்து, கொள்ளு பேரன் - பேத்திகளையும் எடுத்து விட்டார், த்ரெசியம்மா.இன்று வரை அலோபதி மருந்துகளை நாடாமல், நல்ல ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்பாக இருக்கிறார், த்ரெசியம்மா.'உங்கள் இளமையின் ரகசியம் என்ன?' என்று கேட்டால், சிரிப்பு தான் பதிலாக வருகிறது.அந்த சிரிப்பு தான், இவரது இளமைக்கு காரணம் என்கிறாரோ!ஜோல்னாபையன்