இதப்படிங்க முதல்ல..
ஏ.ஆர். ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார்கடந்த, 2008ல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக, 'ஜெய் ஹோ...' பாடல் மற்றும் சிறந்த சவுண்ட் ட்ராக்கிற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அதையடுத்து, கடந்த, 2010ல் அவர் இசையமைத்த, 128 ஹவர்ஸ் என்ற படத்துக்காக ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டது; ஆனால், விருது கிடைக்கவில்லை. இருப்பினும், தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள, கோச்சடையான் மற்றும் மில்லியன் டாலர் ஆர்ம் படங்களுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.— சினிமா பொன்னையாதோழிகளான ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா!ஒரு காலத்தில் ஸ்ருதிஹாசனும், தமன்னாவும் தோழிகளாக இருந்தனர். ஆனால், தெலுங்கு படங்களை கைப்பற்றுவதில், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக, அவர்களது நட்பில் கீறல் விழுந்தது. அதையடுத்து, ஹன்சிகாவுடனும், ஸ்ருதி மோதினார் என்றாலும், பின், அவர் தமிழுக்கு வந்து விட்டதால், அவர்களுக்கிடையே மோதல் வெடிக்கவில்லை. இந்நிலையில், தற்போது விஜய்யுடன், மாரீசன் படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா இருவருமே இணைந்து நடித்து வருகின்றனர். பழைய தொழில் போட்டி ஒரு பக்கம் இருந்தாலும், அதையெல்லாம் ஓரங்கட்டி, படப்பிடிப்பு தலத்தில் இருவருமே, ஒரே இடத்தில் அமர்ந்து, சிரித்து பேசி, அரட்டையடித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரே படத்தில் நடிக்கும் இரண்டு நடிகைகள், இப்படி ஜாலியாக அரட்டையடிப்பதைப்பார்த்து, மொத்த யூனிட்டே ஆச்சர்யப்படுகிறது. உறவும், பாசமும் உதட்டோடே!— எலீசாதிகில் படம் தேடும் கிருஷ்ணா!கழுகு படத்திற்கு பின், கிருஷ்ணாவுக்கு ஒரு அடையாளம் கிடைத்தது என்றாலும், அவர் நடித்த படங்கள், வெற்றி அடையாததால், மார்க்கெட்டில் பின்தங்கியே இருந்தார். ஆனால், யாமிருக்க பயமேன் என்ற திகில் படம், மீண்டும் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதையடுத்து, இப்போது, யட்சன் படத்தில் ஆர்யாவுடனும் இணைந்து நடித்து வரும் அவர், அடுத்தபடியாக வித்தியாசமான, திகில் படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். அதனால், தன்னிடம் யாராவது காதல் மற்றும் ஆக் ஷன் கதைகளுடன் வந்தால், 'இதெல்லாம் தேவையில்லை; வித்தியாசமான பேய் கதைகளுடன் வாருங்கள்...' என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.— சி.பொ.,அஜித் படத்தில் கேங்ஸ்டர் பாடல்!அஜித் நடித்து வரும், என்னை அறிந்தால் படத்தை பொங்கலுக்கு வெளியிடும் வேலைகள் நடந்து வருகிறது. இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான படங்களின் வசூலை முறியடிக்க வேண்டும் என்று டீசர் மற்றும் பாடல்களை வெளியிட்டு வருபவர்கள், 'அதாரு உதாரு...' என்று துவங்கும் பாடலை வெளியிட்டு, 'இது ஒரு கேங்ஸ்டர்; இதுவரை எந்தவொரு தமிழ் படத்திலும் இல்லாத புதுமையான யுக்தியுடன் இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது...' என்று புதிய பரபரப்பை முடுக்கி விட்டுள்ளனர். இதனால், விஜய்யின், கத்தி படம் வெளியான போது, அவரது ரசிகர்கள் அடித்த லூட்டியை விட, இப்போது அஜித்தின் ரசிகர்கள் சமூக வளைதளங்களில் செம லூட்டி அடித்து வருகின்றனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!ஆடுகளம் நடிகையை நிழல் போல் தொடர்ந்து வந்த ஆண் நண்பர்களால், அவரது பாசறை நடிகர்கள், அனைவருமே விலகி விட்டனர். இதனால், அம்மணியின் மார்க்கெட்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் ஆண் நண்பர்கள் மோகத்தில் தன்னை மறந்து விட்ட நடிகை, இப்போது, உஷாராகி விட்டதோடு, அந்த ஆஸ்திரேலிய ஆண் நண்பரையும் ஸ்பாட்டுக்கு வர அனுமதிப்பதில்லை. கூடவே, தன்னை விட்டு விலகி நின்ற நடிகர்களிடம் வலிய சென்று பேசி, மீண்டும் நட்பை புதுப்பித்து வருகிறார்.கழுகு நடிகையுடன் நடித்து வரும் பாய்ஸ் நடிகர், அந்த படத்தின் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தபோது, நடிகையின் ஓட்டல் அறைக்குள் அடிக்கடி சென்று கடலை போட்டுக் கொண்டிருந்தார். அதோடு, கேமரா முன் வந்தபோதும். நடிக்க வேண்டியதை மறந்து நடிகையுடன், 'கிசுகிசு'ப்பதையே முக்கிய வேலையாக கொண்டிருந்தார். அவர்களின், இந்த லூட்டி காரணமாக, படப்பிடிப்பு நாட்கள் நீட்டிக்கப்பட்டதோடு, தயாரிப்பாளருக்கும் பல லட்சங்கள் வீணாகி விட்டது.துளிகள்!* வை ராஜா வை படத்தில் தனுஷ் சொன்னதற்காக கெஸ்ட் ரோலில் நடித்த, ஆடுகளம் டாப்சி, அடுத்து தனுசுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க பேசிக்கொண்டிருக்கிறார்.* பிரபல பேச்சாளரும், எழுத்தாளருமான இளசை சுந்தரம், கே.பாக்யராஜ் இயக்கி, வெளிவர இருக்கும், துணை முதல்வர் படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடிக்கிறார்.* தமிழுக்கு எண் ௧ஐ அழுத்தவும் என்ற படத்தில், இளம் வயது விஞ்ஞானியாக நடித்துள்ளார் நகுல்.* திருட்டுப்பயலே பட கதாநாயகன் ஜீவன், சில ஆண்டு இடைவெளிக்குபின், தற்போது, ஜெயிக்கிற குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார்.அவ்ளோதான்!