கோட்டையில் திருமணம்!
பெரும் தொழில் அதிபர்கள் மற்றும் பல பிரபலங்கள், தங்கள் பிள்ளைகளை, ராஜகுமாரர் - ராஜ குமாரத்திகளாக நினைத்து, அவர்களது திருமணத்தை, மன்னர்களின் கோட்டைகளில் நடத்துகின்றனர். இது, இப்போது, 'பேஷன்' ஆகப் பரவி வருகிறது.கோட்டைகளுக்கு பிரசித்தி பெற்றது, ராஜஸ்தான் மாநிலம். ஜெய்ப்பூர், ஜெய் மஹால், ஜெய் கார்க் கோட்டை, அலிலா கோட்டை ஆகியவற்றிலும், ஜோத்பூர் மெக்ரன் கார்க் கோட்டை, உதய்பூர் சிட்டி அரண்மனை, ஆல்வார் நகரில் உள்ள, நீம்ராணா கோட்டை என, பலவற்றில் இன்று திருமணங்களை நடத்துகின்றனர்.இதற்கான கட்டணம், ஒரு நாளைக்கு, 10 - 25 லட்சம் ரூபாய். தங்குதல் மற்றும் உணவு செலவு தனி.கர்நாடக மாநிலம், மைசூரு லலிதா மஹால், பெங்களூரு அரண்மனை மைதானம், ஹம்பி, பெல்லாரி உட்பட பல கோட்டைகளிலும், திருமணங்கள் தற்சமயம் நடைபெறுகின்றன. பழைய கோட்டைகளில் திருமணம் நடத்துவது சரி... கோவில்களில், பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்ட இடங்களை, திருமண மண்டபமாக மாற்றாமல் இருந்தால் போதும்.— ஜோல்னாபையன்.