உள்ளூர் செய்திகள்

நவராத்திரி ஸ்பெஷல்!

நவராத்திரி சமயத்தில், பட்சணங்கள் செய்ய, பனைவெல்லம், ஜாதிக்காய், சுக்கு, லவங்கம், எள், ஏலக்காய் மற்றும் பாதாம் இவற்றை வறுத்து, பின் பொடித்து வைத்துக் கொள்ளலாம்.* பேரீட்சை பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை தேனில் ஊற வைத்து, கொலுவிற்கு வரும் சிறு குழந்தைகளுக்கு, கொடுங்கள். சத்தாக இருப்பதோடு, இனிப்பாகவும் இருப்பதால், விரும்பி சாப்பிடுவர்.* ஜவ்வரிசி மற்றும் ரவையை சம அளவு எடுத்து, பாலுடன் சேர்த்து வேக விட்டு, வெல்லம், ஏலக்காய் போட்டு, நெய் விட்டு இறக்க, சுவையில் அசத்தும், வித்தியாசமான பொங்கல் தயார்!* முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா இவற்றை ஈரத்துணியில் வைத்திருந்து பின் சீவ, மெல்லியதாக உடையாமல் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !