உள்ளூர் செய்திகள்

சட்டத்தை மீறலாம்; தவறல்ல!

சட்டங்களை மதிக்காமல் இருப்பது, சில மனிதர்களின் இயல்பு; கனடா நாட்டிற்கும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சாலையை கடக்க வெள்ளை கோடு போடப்பட்ட இடத்தில், பாதசாரிகள் சாலையை கடந்து செல்லும் போது, வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி வழி விட வேண்டும் என்பது எல்லா நாடுகளிலும் உள்ள சட்டம். ஆனால், அங்கும் சிலர் விதியை மதிக்காமல், மக்கள் சாலையை கடக்கும் போது, வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி விபத்து ஏற்படுத்துகின்றனர். இதை தவிர்க்க, கனடா நாட்டில், சாலையை கடக்கும் இடத்தில் படத்தில் உள்ளது போல், செங்கற்களை வைத்திருப்பர். சாலையை கடப்பவர்கள் அங்கிருக்கும் செங்கற்களை கையில் துாக்கி பிடித்தபடி சாலையை கடந்து செல்வதை காணும் ஓட்டுனர், வண்டியை நிறுத்தி விடுவார். அப்படி நிறுத்தவில்லை என்றால், பாதசாரிகள் கையிலுள்ள செங்கற்களை, வாகனத்தின் மீது வீசுவர்; வாகன கண்ணாடிகள் உடையும். அங்கு இது, குற்றமாக கருதப்படாது. மக்கள் பாதையை கடக்கும்போது, நிறுத்தாமல் சென்ற, வாகன ஓட்டுனர்களுக்கு தான் தண்டனை கிடைக்கும். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

val
செப் 07, 2026 02:31

வான்கூவரில் சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைக்க, பாதசாரிகள் நுரையால் செய்யப்பட்ட போலிச் செங்கல்களை ஏந்திக் கடப்பது போன்ற நகைச்சுவையான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது சட்டமோ நிரந்தர நடைமுறையோ அல்ல.