உள்ளூர் செய்திகள்

அச்சச்சோ... படம் மாறிப் போச்சே!

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர், மார்கரட் தாட்சர் சமீபத்தில் மரணமடைந்தார். அந்த மரணச் செய்தி, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளிலும் வெளி வந்தது. தாய்லாந்து நாட்டு பத்திரிகை ஒன்றிலும், தாட்சரின் மரணச் செய்தி வந்தது. ஆனால், செய்தியை பார்த்த அனைவரும் முகத்தை சுளித்தனர். காரணம், தாட்சர் படத்துக்கு பதிலாக, மெரில் ஸ்ட்ரீப் என்ற நடிகையின் போட்டோ தான் வெளிவந்தது. மார்கரட் தாட்சரின் வாழ்க்கையை, 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருந்தனர். அந்த படத்தில், தாட்சர் வேடத்தில் நடித்தவர் தான், மெரில் ஸ்ட்ரீப். நம்மூர் பத்திரிகைகள் எவ்வளவோ தேவலாம் என்கிறீர்களா?— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !