கவிதைச்சோலை! - சுதந்திரம்!
சுதந்திரம்பாரதம் மகுடம் சூடியசுய ராஜ்யம் என்பதற்கானஅடையாளம்!அஹிம்சை கொள்கைக்குஅவனி பரிசாய் கொடுத்தஅட்சய பாத்திரம்!சமாதான வாழ்வுக்குசரித்திரம் போட்டசபாஷ்!படைகளை விடவும்பவித்திரமானதுபாரதத்தின் துணிவு என்பதைபதிவு செய்ததற்கான பரிசு!விடுதலை வேள்வியில்தலைவர்கள் சிந்தியகுருதிக்கான கொடை!பகல் - இரவு பாராமல்ஒன்றி உழைத்ததைஉறுதி செய்யும்உத்திரவாதம்!காஷ்மீர் துவங்கிகன்னியாகுமரி வரைபரந்த தேசம் என்பதற்கானபட்டா பதிவு!எள்ளி நகையாடியஅன்னிய சக்திகளின்அகங்காரத்துக்குவிழுந்த அடி!சர்வ வல்லமைகொண்டது சத்யாகிரகம் மட்டுமேஎன்பதற்கான சாட்சி!இப்படி -சுதந்திரத்திற்கானசொல் விளக்கத்தைசொல்லிக் கொண்டேபோகலாம்!சுதந்திரம் என்ற சொல்பல எழுத்துகளின்இணைவாக இருக்கலாம்சுதந்திரத்திற்காகஇழந்த கழுத்துகளின்கணக்கைகணக்கிடவே முடியாது!எல்லா பேதங்களையும்எடுத்தெறிந்து ஓர் குலமாக ஒன்றி நின்றதால்இந்தியா வென்றது!இந்த அட்சய பாத்திரத்தில்கை விட்டு எதையும்எடுத்தவர்கள் இல்லை!மாறாக -கொடுத்தவர் கூட்டமேகொண்டாடப்படுகின்றனர்!இந்தியா -எடுப்பவரை அல்லகொடுப்பவரையேதன், ஆத்மாவாக எண்ணிஆராதிக்கிறது!யுகங்கள் கோடியானாலும்இந்தியாஇரும்பு அரணால் காக்கப்படும்!அதன் மக்கள்அன்னை தேசத்திடம்தேவைக்கு கை விரிப்பவர்கள் அல்ல...தேச சேவைக்கு கை கொடுப்பவர்கள்!வாழ்க சுதந்திரம்...வாழ்க இந்தியா!— வளர்கவி, கோவை.