உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அப்பா!எங்கள் இல்லத்தின் சுமைதாங்கிஎங்கள் பயணத்தின் வழிகாட்டிஎப்போதும் ஏழ்மை தான்எனினும் மனதில் பணக்காரர்!நல்ல பள்ளியில் என்னை சேர்த்தார்மதிப்பெண் குறைந்த போதிலும்மனதாலும் என்னை கண்டிக்காதவர்'பள்ளியை மாற்றுவோமா' என்பார்!உடன்பிறந்தோர் எட்டு பேர்அனைவரும் அவருக்கு சரிசமம்!அவரால் மட்டுமே அது சாத்தியம்!பரோட்டா கேட்போம் நானும், தங்கையும்இருந்த பணத்துடன் கூட்டிச் செல்வார் ஓட்டலுக்குஇருவருக்கும் வாங்கிக் கொடுத்துதனக்கு மட்டும், 'வயிற்று வலி' என்பார்!நான் புகைத்தேன்; அவர் கண்டித்ததில்லைகாலியா இருக்கும் என் சட்டைப் பைஅவ்வப்போது பணம் வைத்தார்காரணம், அவரும் புகைக்கு அடிமை!வெடுக்கென்று என்னை பேசினாள் மனைவி...பொறுத்துக் கொள்ளாமல் போன் செய்தார்அவளின் அப்பாவுக்குகோபமே வராத அவரிடம் கோபம்!நானும், மனைவியும் சண்டைக் கோழிகள்அப்பாவும் அம்மாவும் அமைதிப் புறாக்கள்அவர்கள் போல வாழ முயற்சித்து தோற்கிறோம்ஆனாலும் இருவரும் அவரை நேசிக்கிறோம்!உறவினரை கண்டால் உறக்கம் போச்சுவிடிய விடிய ஜாலியான பேச்சுஊரில் ஒருவருக்கு பிரச்னை என்றால்அவர் கண்ணில் வரும் கண்ணீர்!உடன் பிறந்தாரை அரவணைத்தவர் அவர்அதுபோல் நாங்கள் இல்லையே... ஏன்?கோளாறு விதையில் இல்லை; விளைந்ததில் தான் அபார்ட்மென்ட்...சுற்றிலும் ஒற்றை குடும்பங்கள்!அவர் போல் நான் இருக்க முயற்சிக்கிறேன்ஆனாலும், ஆரம்பத்திலேயே தோற்கிறேன்இப்போதே என் மகன் கூறுகிறான்'உங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்று!என் அப்பா இருந்த காலம் பொற்காலம்அவர் இல்லாத காலம் இறந்த காலம்எப்போது அவர் வருவார் எதிர்காலம்எண்ணிக் கொண்டிருக்கிறேன் பல காலம்!— ஏ.மீனாட்சிசுந்தரம்,சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !