உள்ளூர் செய்திகள்

புத்தகம் எழுதும் கன்னியாஸ்திரிகள்!

கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில், கன்னியாஸ்திரி மடங்கள் மற்றும் சர்ச்சுகளில் இருந்து வெளியேறிய கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் இணைந்து, 'கேரளா கத்தோலிக்க சர்ச் ரிபார்மேஷன் மூவ்மென்ட்' என்ற சங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இவர்கள், தாங்கள் பாதிரியாராகவும், கன்னியாஸ்திரிகளாக இருந்த போதும், பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகவும், அதுகுறித்து மதத் தலைவர்களிடம் புகார் செய்த போது, மிரட்டி விரட்டப்பட்டதாகவும் கூறி, தங்கள் வாழ்வில் சந்தித்த துன்பங்கள் மற்றும் பாலியல் கொடுமைகளை பற்றி புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட, 400க்கும் மேற்பட்டோர் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பாதிக்கப்பட்ட மேலும் பலர், தங்கள் அனுபவங்களை புத்தகங்களாக எழுத உள்ளனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !