கவிதைச்சோலை!
எந்தப் பாதை நமது?வாழ்க்கைநம்முன்வைக்கும் பாதைகளில்எது நம் பாதை!பல்வேறு பாதைகள்பாய் விரித்தாலும்உள்ள பாதைகளில்ஒன்றைத் தானேஉபயோகிக்க முடியும்!ஆரம்பமே அசத்தலாய்அகண்டு கிடக்கும்ஆயிரம் பாதைகள்நாலே எட்டுநடப்பதற்குள்சுருண்டுசுருங்கிக் கிடக்கின்றன!எல்லாருமே ஏன்பலர் நடந்த பாதையிலேயேபயணிக்க விரும்புகின்றனர்...ஒன்றே ஒன்றுஒத்தையடிப் பாதையாய்உபயோகமில்லாமல்ஒதுங்கிக் கிடந்தது!நடக்க நடக்கஅதுமட்டுமேநல்லோர் மனம்போல்விரிந்து கொண்டே வந்தது!இலக்கை எட்டநம்முன் தான்எத்தனை எத்தனை பாதைகள்!அதர்ம பாதைகள்விரிவாய் துவங்கிசுருங்கிக் கொள்ளும்!உத்தம பாதைஒன்று மட்டுமேநடக்க நடக்கவிரிந்துவெற்றி கொடுக்கும்!இன்பத்தில் துவங்கிதுன்பத்தில் முடிவதை விடதுன்பத்தில் துவங்கினாலும்வெற்றிக்கு துணை வந்துஇறுதியில்இன்பம் கொடுக்கும்ஒற்றை பாதையே உயர்வானது!— வே.சுந்தரராஜன், கோவை.