கவிதைச்சோலை!
கல்லாய் போ...கர்ப்ப கிரகத்தில் அமர்ந்துவேண்டுவோருக்குவரம் அளிக்கிறதுஒரு கல்!கோவில் சுவருக்குசுற்றுக்கல்லாய் நின்றுகடவுளைக் காக்கிறதுஇன்னொரு கல்!நடுக்கல்லாய் நின்றுவீரத்தைப் போற்றுகிறதுவேறொரு கல்!நெருப்பு பொறியைகண்டறிய உதவியதும்கற்கள்தான்!இரும்பு காலத்திற்கு முன்இருந்த ஆயுதங்களும்கற்களே!வாழ்ந்த காலங்களின்வரலாற்றைகற்கள் தான் சொல்கின்றன!பிறகெதற்கு கவலைப்பட்டுகண்ணீர் உகுத்து நின்றாய்அகலிகை...'கல்லாய் போ' என்றுஉன் கணவன் சபித்ததற்கு!இ.எஸ்.லலிதாமதி, சென்னை.