உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இருந்தால் கொடுங்கள்!அம்மாக்களே...மனதைப் புண்படுத்தாமல்அனைவரையும் அரவணைக்கதிகட்டாத அன்பைக் கொடுங்கள்!அப்பாக்களே...நல்ல மனிதத்துடன்தரணி போற்ற வாழஉயர்ந்த பண்பைக் கொடுங்கள்!ஆசிரியர்களே...உலகை ஜெயித்துதாய்நாட்டின் பேர் காக்கஅறிவுடன் அடக்கத்தைக் கொடுங்கள்!உறவினர்களே...மகிழ்ச்சி, துக்கம்எல்லாவற்றிலும் உடனிருக்கஅகலாத நம்பிக்கையைக் கொடுங்கள்!நண்பர்களே...வாழ்வின் எல்லாவற்றையும்காலம் கடந்து பேசபசுமையான நினைவைக் கொடுங்கள்!— மருதாணி, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !