கவிதைச்சோலை!
கேட்டுவிட்டுப்போகட்டும்!சிறு விதை துளிர்த்ததற்குத்தானாகுதுாகலிக்கிறாய் என்றுகேட்டு விட்டுப் போகட்டும்...இதுநாள் வரைபாலைவனமாய் கிடந்ததைஅறியாதவர்கள்!சிறு புன்னகையை உருவாக்கத்தானாபிரயத்தனப்படுகிறாய் என்றுகேட்டு விட்டுப் போகட்டும்...இதுநாள் வரைஇறுகிக் கிடந்த உதடுகளைஅறியாதவர்கள்!சிறு விளக்கின் சுடரைஏற்றி வைத்ததற்குத்தானாஆர்ப்பாட்டம் செய்கிறாய் என்றுகேட்டு விட்டுப் போகட்டும்...இதுநாள் வரைகண் மறைந்த இருளைஅறியாதவர்கள்!எழுத்துக் கூட்டிபடிக்க வைத்ததற்குத்தானாபரவசம் கொள்கிறாய் என்றுகேட்டு விட்டுப் போகட்டும்...இதுநாள் வரை எழுத்தறிவின்றிஎதையெதையோஇழந்ததை அறியாதவர்கள்!சிறு துணியைஉடுக்க வைத்ததற்குத்தானாஉவகை கொள்கிறாய் என்றுகேட்டு விட்டுப் போகட்டும்...இதுநாள் வரைநிர்வாணமாய் இருந்ததைஅறியாதவர்கள்!எவரையும் சிகரத்தில் ஏற்றி வைப்பதுசிறந்ததே...அதைவிட சிறந்ததுபடுகுழியில் விழுந்தவரைகைகொடுத்து துாக்கி விடுவது!— கீர்த்தி, கொளத்துார்