கவிதைச்சோலை!
நம்பிக்கை என்ற நல்லதொரு சக்தி!கல்வி கற்றதால்கயமைத் தனத்தைஇழந்தோம்!பக்குவப்பட்டபண்புகளால்பகைவர்களைஇழந்தோம்!பாடுபட்டதால்பட்டினியைஇழந்தோம்!முன்னேறும்பகுத்தறிவால்மூட நம்பிக்கையைஇழந்தோம்!வேலைகாரணமாய்வெட்டிப் பேச்சைஇழந்தோம்!கள்ளமில்லாதகாரணத்தால்கபடத்தைஇழந்தோம்!நல்ல எண்ணங்களைநட்பாக்கியதால்நயவஞ்சகத்தைஇழந்தோம்!அறிவு சார்ந்தகொள்கைகளால்அறியாமையைஇழந்தோம்!துயர் துடைக்கும்துாய உள்ளத்தால்துரோகத்தைஇழந்தோம்!தனக்காக வாழாமல்பிறர்க்காக வாழ்ந்ததால்தன்னலத்தைஇழந்தோம்!ஆதலால்இப்போது, இங்குஇழந்தோம் என்பதுஇழக்க வேண்டியதுஇழி சக்திகள் தான்!ஆனால்,எப்போதும்எதற்காகவும்எந்த இடத்திலும்இழக்கக் கூடாது,'நம்பிக்கை' என்றநல்லதொருசக்தி மட்டுமே!பெ.கருணைவள்ளல், சென்னை.