கவிதைச்சோலை!
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்!ஓட்டுக்குபணம் கொடுப்பதையும்,வாங்குவதையும்வரலாற்றில்இடம்பெறச் செய்தவல்லமை படைத்தவர்கள்நாங்கள்!சிறப்பு வசதிகள்அனைத்தையும்சிறையில்அமைத்து தந்தசிங்கார வேலவர்கள்நாங்கள்!மணல் கொண்டு தான்மாடி வீடு கட்ட முடியும்என்பதை மாற்றிமணல் கொள்ளை மூலமும்மாட மாளிகைகள்கட்ட முடியும் எனமாற்றிக் காட்டியமண்ணின் மைந்தர்கள்நாங்கள்!கைத்தொழில் ஒன்றைகற்றுக்கொள்கவலை உனக்கில்லைஒத்துக்கொள் என்பதைகையூட்டு வாங்கக்கற்றுக்கொள்கவலை உனக்கில்லைஒத்துக்கொள் என,காட்சிப்படுத்திய கனவான்கள்நாங்கள்!பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களைபணம் வாங்கும் பல்கலைக்களங்களாகபரிமளிக்கச் செய்தபகலவ வேந்தர்கள்நாங்கள்!வேண்டாத விஷயங்களுக்காகவிசாரணைக் கமிஷன் அமைத்து பணத்தை வீணாக விரயம் செய்யும்வேடிக்கை மனிதர்கள்நாங்கள்!கொள்கையை குழிதோண்டிபுதைத்து விட்டுகொள்ளையை கொலுவில் ஏற்றிகோடி கோடியாய் குவிக்கும்கோமான்கள் நாங்கள்!ஓதாமல் ஒரு நாளும்இருக்க வேண்டாம்என்பதைஊழல் புரியாமல்ஒரு நாளும் இருக்க வேண்டாம்என்று உலகுக்குஉணர்த்திக் காட்டியஉத்தம சீலர்கள்நாங்கள்!இத்தனை சாதனைபுரிந்த எங்களைஎதுவும்செய்து விடாதீர்கள்ஏனென்றால்...கோடிகளைக் கொட்டிகோலோச்சவந்திருப்பவர்கள்நாங்கள்கொட்டிய கோடிகளைஎடுக்க கொஞ்சம்அவகாசம் கொடுங்கள்!பெ.கருணைவள்ளல், சென்னை.