கவிதைச்சோலை!
எது முக்கியம்நாள்காட்டியில் தேதியைகிழிப்பது முக்கியமில்லை...அந்த தேதியில்நாம் என்ன கிழித்தோம்என்பதே முக்கியம்!மற்றவர்களுக்கு பிடித்தது போலபளபளப்பாய் வாழ்வதுமுக்கியமில்லை...என்றும் நமக்கு பிடித்தது போலகலகலப்பாய் வாழ்வது தான்முக்கியம்!ஏமாறாமல் வாழ்வதுமுக்கியமில்லை...பிறரை ஏமாற்றாமல் வாழ்வது தான்முக்கியம்!வரவுக்கு ஏற்ப பணத்தைசெலவழிப்பது முக்கியமில்லை...அந்த பணத்தைநாம் எப்படி சம்பாதித்தோம்என்பதே முக்கியம்!அனாதை இல்லத்திற்குஅள்ளித் தருவது முக்கியமில்லை...அந்த இல்லத்திற்குநம் பெற்றோரைஅனுப்பாமல் இருப்பதே முக்கியம்!தத்துவங்களை மேடையில்பேசுவது முக்கியமில்லை...அதன்படிநாம் நடக்கிறோமா என்பதே முக்கியம்!மற்ற செல்வங்களோடுவாழ்வது முக்கியமில்லை...பெற்ற பிள்ளைகளோடுவாழ்கிறோமா என்பதேமுக்கியம்!துரோகம் செய்த நண்பனைதுரத்துவது முக்கியமில்லை...தவறு செய்த நண்பனைதிருத்துவதே முக்கியம்!விழாமல் வாழ்வை கடப்பதுமுக்கியமில்லை...அப்படி விழுந்தாலும்உடனே எழுந்துநடப்பது தான் முக்கியம்!நம்மை சிரிக்க வைப்பவர்களைசிரிக்க வைப்பது முக்கியமில்லை...நம்மை கண்டுஏளனமாய் சிரிப்பவர்களைசிந்திக்க வைப்பதே முக்கியம்!மு.பெ.ராமலிங்கம், கோவை.