உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நனைவோம் மழையின் நீரில்!குளங்களை மூடி விட்டுகுடியிருப்புகளைஎழுப்பிக் கொண்டோம்இன்று, குடம் நீருக்காய்ஓடிக் கொண்டிருக்கிறோம்வீதியெங்கும்!மேகங்களை தருவித்துமழை தரும் விருட்சங்களைவெட்டி சாய்த்து விட்டோம்!சாய்த்த இடங்களில்வேண்டும் மட்டும் வெட்டினாலும்கிடைப்பதே இல்லைசொட்டாகக் கூட நீர்!நதி பாயும் பாதையை அடைத்துநமக்கானதாய் எடுத்துக் கொண்டோம்இன்று, நாவறண்டு தவிப்பதுநாம் மட்டுமல்லநம்மை சார்ந்த உயிர்களும் தான்!அறிவியலால்ஆயிரம் கண்டறியலாம் நாம்ஆயினும், கண்டறிய இயலுமாஇன்னொரு ஆகாயத்தை...அங்கே அலையும் மேகத்தை?இருக்கும் குளத்தை, நதியைமரங்களின் நிழலில்ஒதுங்க விட்டு...பிறகு நனைவோம் நாம்மழை நீரில்!இ.எஸ். லலிதாமதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !