உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காதல்....அழகைப் பார்த்துகாதலிப்பதாகாதல்...ஆளைப் பார்த்துஆடையைப் பார்த்துஒப்பனை பார்த்து...பட்டம் பார்த்துபதவி பார்த்துவருமானம் பார்த்து...ஜாதி, மதம் பார்த்துவயது பார்த்துவசதி பார்த்து...உருவம் பார்த்துஅளவு பார்த்துநிறம் பார்த்து...சுற்றம் பார்த்துசூழல் பார்த்துபின்புலம் பார்த்து...சுற்றிச் சுற்றி வந்துஅலையாய் அலைந்துதவியாய்த் தவித்து...தாடி வளர்ப்பதும்மனம் வெறுப்பதும்கற்பழிப்பதும்...ஆசிட் ஊற்றுவதும்கொலை செய்வதுமாகாதல்...இல்லவே இல்லை...இதயம் நிறைந்துமுழு மனதோடு'எங்கிருந்தாலும் வாழ்க'வெனவாழ்த்தி அனுப்புவது தானேஉண்மைக் காதல்!சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.காதல் ஞானம்!தளிரும் தலை துாக்கதயங்கும் குளிர் காலம்துளிர்த்த காதலுக்குஊஞ்சல் உற்சவம் நடத்துகிறதுகாதலர் தினம்!மாதங்களில் இதுஇரண்டாவதாக இருந்தாலும்மனங்களைஒன்றாக ஆக்குகிறது!நால் வகை ஜாதிகளில்ஆர்ட்டின் ஜாதியை மட்டுமேஆராதிக்கிறது, காதலர் தினம்!காதலை எதிர்ப்போரின்கண்களில் மண்ணைத் துாவிநேசித்தவன் நெஞ்சுரத்தை மெச்சிஉருமாலை கிரீடத்தைஉற்சாகமாய் சூட்டி மகிழ்கிறது!'கை பிடிக்கும்கருத்தோடு காதலியுங்கள்...' என,காதலருக்கு கருத்து சொல்லவேதை மகளாய் தரணியில்பிப்ரவரியில் உதிக்கிறதுகாதலர் தினம்!காதலர்கள்ஒருவர் மேல் ஒருவர்நண்டு பிடியாய் நம்பிக்கை வைக்கஞானம் தருகிறது பிப்ரவரி!காதலர் தினத்தை கொண்டாடும் முன்,காதல் ஞானம் தந்த பிப்ரவரியைநன்றியோடு நெஞ்சில் நிறுத்துங்கள்!ஏனெனில் -காதலைஆயிரம் காலத்து பயிராக ஜனிக்க செய்து,தாய் நண்டாக அல்ப காலத்தில்ஆயுள் முடிக்கிறதே பிப்ரவரி!தீபா ஆனந்த், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !