உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழ்வின் துளிகள்!துளிகளால் ஆனது கடல்துயரங்களால் ஆனது வாழ்வுஆயினும்,சின்னச் சின்ன சந்தோஷங்களில்சிறகடிக்கும் சிறு மனது!வாழ்வென்பதேநெரிசல் மிகுந்ததாய் ஆகிப்போனது...முட்டி, மோதி முன்னேறநெருக்கித் தள்ளுகின்றனர்எல்லாரும் என்னை...நானும் மற்றவர்களை!வாழ்க்கை முழுவதும்ஒத்துப்போக முடிவதில்லைஒருவருடனும்...ஒதுங்கி வாழ முயன்றாலோதகிக்கிறது தனிமை!ஆயுள் முழுதும் தொடர்கிறதுதன்னை யாரென்று நிரூபிப்பதும்அங்கீகாரங்களுக்கு அலைவதும்மாற்றவே முடியாதமனித அவலம் இது!கடவுள் இல்லை என்றுஎத்தனை தீவிரமாய் நம்பினாலும்நெருக்கடிகள் நேரும்போதெல்லாம்அலைபாயும் மனம் சரணடையும்ஆண்டவனிடமே!வாழ்வின் காலம்கடந்து கொண்டிருக்கிறது...நம்முடைய கர்வங்களை நகைத்தபடி;நம்புகிற தத்துவங்களைத் தகர்த்தபடி!மழை ஈசல்களைப் பாருங்கள்விதிக்கப்பட்ட வாழ்க்கைஒரே ஒரு நாள் தான் - ஆயினும்எத்தனை சந்தோஷமாய் சிறகசைத்துபுற்றிலிருந்து புறப்பட்டு வருகின்றனவாசலில் காத்திருக்கும்வலைகளையும் மீறி...வாழ்ந்து தீர்த்து விடலாம் நாமும்நம்பிக்கை இழக்காமல்!சோ. சுப்புராஜ், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !