உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அப்பா...ஜூன் 21 - தந்தையர் தினம்உன் ஆள்காட்டி விரல்பிடித்து நடந்த காலந்தொட்டுஎன் நடையை மட்டுமல்லநடத்தையையும் ஒழுங்குபடுத்தியவகுப்பறை காணாத ஆசிரியர் நீ!உயரங்களை விட உயரமாகநான் உயர வேண்டும் என்பதற்காகதோள்களையே ஏணியாக்கியஉழைப்பின் உருவம் நீ!எண்ணும், எழுத்தும்என் கண்களாவதற்காகஉன்னையே உருக்கிக் கொண்டமெழுகுவர்த்தி நீ!கஷ்டங்கள் சூழ்ந்து விடாமலிருக்கஉழைப்பு நேரத்தை நீட்டிக் கொண்டஇரவில்லா பகல் நீ!குடும்ப விருட்சத்தின்கிளைகள் தோறும்வெற்றிகளை விளைத்தெடுக்கஉன்னையே உரமாக்கிக் கொண்டவிசித்திர பிறவி நீ!ஒளியை இழந்த பிறகு தான்கண்களுக்குவெளிச்சத்தின் அருமை புரியும்...என்பதை உணர்த்தியஅமரத்துவம் நீ!அப்பா...உன் சுவடுகளெல்லாம்சுடர்களாக ஒளிர்வதால்பாதை மாறாமல் பயணப்படுகிறேன்!கவிதாசன், கோவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !