கவிதைச்சோலை!
'நவராத்திரி தரும் ஞானம்!'அறுவகைச் சமயங்களில்ஒருவகைச் சமயம்'சாக்தம்!'அது -சக்தி வழிபாட்டால்முக்தி பெறுவதைமுன்னிலைப்படுத்துகிறது!விண் கண்ட தெய்வங்களில்கண் கண்ட தெய்வங்கள்மூன்று!அந்த மூவருக்காகயாவரும் நலம்பெறஎடுக்கும் விழா நவராத்திரி!மனிதன் தாமசம் விட்டுராட்ஷம் கடந்துசத்வம் பெறுவதையேசக்தி வழிபாடுமுக்தி என்கிறது!இதையே துர்கா பூஜை துவங்கிலட்சுமி பூஜை கடந்துசரஸ்வதி பூஜையின் நிறைவாய்சக்தி வழிபாடு சாற்றுகிறது!'துஷ்ட நிக்ரஹம்சிஷ்ட பரிபாலனம்'இது -அஷ்ட லட்சுமிகளால் மட்டுமேஆகும் காரியம் என்பதைஅறிவுறுத்துகிறது நவராத்திரி விழா!நவராத்திரி பெருவிழாவிழாக்களின் பீடத்தில்கொலுவிருக்கும்கொலு விழா!ஆதி லட்சுமி துவங்கிவித்யா லட்சுமி வரைஅஷ்ட லட்சுமிகட்கும்நடக்கிற விழா...என்றாலும் -எட்டு லட்சுமிகளுக்கானஒன்பது நாள் விழா...பத்தாம் நாளேமுடிவு பெறுகிறது!பட்டாடை மின்னி வரகுட்டிச் சிறுமிகளின்பண்ணும், பரதமும்மண்ணதிர நடக்கும்மணி விழாநவராத்திரி திருவிழா!விஜயதசமியின்விழா நிறைவுமனிதம் ஞானம் சூடும்மகுட நாள்!இந்த, 10 நாட்களும்கொடுப்பதும்கொடுப்பதால் களிப்பதும்கொலு நிறைவு பெறுகிறது!தருவதில், பெறுகிற இன்பம்பெறுவது, தருவதில்லை!இதை - படிப்படியாய் உணர்த்துகிறதுகொலுப்படிகளால் கோலோச்சும்நவராத்திரி நாட்களின் ஞானம்!வளர்கவி, கோவை