கவிதைச்சோலை!
வெற்றி வெகு துாரமில்லை!எது வெற்றி எது தோல்விநிர்ணயம் செய்பவர் யார்...வாழ்வில் வெற்றியும், தோல்வியும்சாதாரணமெனில் இங்குமெனக்கெடல்கள் அசாதாரணமோ!நிலவில் இறங்கி சாதனைசெய்யின் வெற்றியெனில்நாளை செவ்வாய் கிரகம் சென்றேமக்களை பதியமிடமுயற்சி களமிறங்கு...வெற்றியும் அருகில் வந்தேதாலாட்டும்!உழைப்பின் உச்சியில்முயன்றால் முடியாததல்லஎன்பதை உலகிற்குஉணர்த்தியே... உன்னையேநீ உயர்த்திட உள்ளுக்குள்ளேஉயர்வுகளுக்கு வித்திடு!அவை நாளைய உலகின்வீரிய மகிழ்வின் விரிந்திடும்ஆல மரமாய்...அங்கே - அப்போதுவெற்றியும் அருகில் வந்தேதாலாட்டும்!வா... உலகுக்கு எடுத்துச்சொல்வோம் - உழைத்தவர்தோற்றதில்லை என்றேவெற்றியின் முகவரியைஉலகிற்கு எடுத்து விரிப்போம்வான வீதியிலே!ரஜகை நிலவன், மும்பை.