உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நேரம் நிற்பதில்லை!மனிதாநேரத்தை வீணாக்காதேஒவ்வொரு நொடியும்உயிர் நாடி!ஒரு மணி நேரத்தில்கழிந்து போவதுநிமிடங்கள் மட்டுமல்லஒவ்வொரு உயிரின்வாழ்நாள்!நேரம் சரியில்லையெனவேலையைத் தள்ளிப்போடுவதுசோம்பேறிகளின் வேலை!நல்லது செய்யநல்ல நேரம் தேவையில்லைநல்லது செய்யும்போதெல்லாம்நல்ல நேரம் தான்!ஓடும் கடிகாரம் நின்று போனாலும்நேரம் நிற்பதில்லை!உட்கார்ந்திருந்தாலும்உனக்கான நேரம்ஓடிக்கொண்டுதான் இருக்கிறதுஒருபோதும்ஓய்வெடுப்பதில்லை காலம்!நாளை மீதுநம்பிக்கை வைப்பதில்தவறில்லை...நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றுநாட்களை தள்ளிப் போடுவது தான்தவறு!நாளை என்பதுஇன்றே கூடஇல்லாமல் போகலாம்!மரணம் போலத்தான்மணித்துளியும்...இழந்தால் மீண்டும் வராதுஇருக்கச் சொன்னால்சரி என்று நிற்காது!பி.சி. ரகு, விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !