உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அணையா ஞான தீபம்!'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்'எனும் மந்திர மொழியின்மறைபொருள் நீ!அன்பு, அரவணைப்பு, அறிவுரைஅத்தனையும் அளவின்றி தந்துதகைசால் தலைமுறையை செதுக்கும்ஒப்பற்ற ஓர் அறிவுலக சிற்பி நீ!மாணாக்கர் யாவரும் கல்வியால்வருங்காலத்தில் வாகைச் சூடிடஎன்றும் வழிக்காட்டி நிற்கும்அரிய கலங்கரை விளக்கம் நீ!கடமையை கண்ணென கருதிஎழுத்தையும், எண்ணையும்எந்நாளும் அளித்திடும்அதிசய அறிவூற்று நீ!உன் அனுதின உழைப்பால்மாணாக்கரை உயர வைத்துஉவகையுடன் உயர்ந்து பார்க்கும்உயர்ந்த உள்ளம் நீ!தவறுகளை திருத்திதன்னம்பிக்கை ஊட்டிதரணியாள தகுதிப்படுத்திடும்தன்னிகரில்லா தலைவன் நீ!கிண்டல், ஏச்சும் பேச்சும்எது வந்து தாக்கினாலும்'பொறுமை' கேடயத்தால்தகர்த்தெறியும் தீரன் நீ!உன்னத லட்சியங்களைஉள்ளத்தில் நிறுத்த செய்துஊர் மெச்சும் அளவிற்குஉயர செய்யும் உத்தமன் நீ!அனைத்து குழந்தைகளையும்நல்ல மனிதராக வடிவமைக்கும்இப்பூவுலகத்து பிரம்மா நீ!பாதகமில்லா போதனையைநாளும் தந்துஅறிவொளி ஏற்றுகிறஅணையா ஞான தீபம் நீ!பெ. ஜெயக்குமார், சிவகாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !