உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எரிபந்து எழுதுகோலோடு...பாரதி - நீமுண்டாசை இறுக்கிமீசையை முறுக்கிஎழுதுகோல் திறந்துஎழுதியபோதுதமிழ் உலகம் அனல் மூண்டதுகவிதை முற்றம் கனல் பூண்டது!நீ அக்னி குஞ்சொன்றை கண்டுபொந்திடை வைத்தபோதேஅன்னியருக்கெதிராய்பொங்கி எழுந்தது நாடு!உன் வார்த்தைகளில் இருந்தவிடுதலை நெருப்பைகிழக்கிந்திய கம்பெனிகளின்அதிகாரப் புயலால்அணைக்க முடியவில்லை!உன் எழுத்துக்களில் இருந்தகதிர்வீச்சை பொறுக்க முடியாமல்மாந்தர் தம்மை இழிவு செய்தமடமைகள் கொளுத்தப்பட்டது!நீவயிற்றுக்காக பாடியதும் இல்லைவாழ்க்கைக்காக ஓடியதும் இல்லை - நீநாட்டுக்காக பாடியதாலே - உன்பாட்டுக்கு பெருமை!நீ பற்ற வைத்த தீயில் தான்தமிழ் அடுப்புகளில்இன்றும் சமையல் நடக்கிறது!எட்டயபுரத்தை எட்டிப் பார்க்காமல்எந்தக் கவிஞனும்எழுதுகோல் பிடித்ததில்லை!ஆனால்உன் கண்களில் தெரிந்தபுரட்சிக்கனல் - இன்றுயாருடைய பார்வையிலும்இருப்பதாக தெரியவில்லை!தமிழன் தன் குழந்தைக்குதமிழ் தெரியாது என்றுசொல்லிக் கொள்வதில்பெருமைப்பட்டுக் கொள்கிறான்!பாலியல் தொல்லைகளும்லஞ்ச லாவண்யங்களும்பெருக்கெடுத்து ஓடுவதால்தேசம் எனும் தேர்நகர முடியாமல் தவிக்கிறது!இவர்களுக்கெல்லாம்சவுக்கடி கொடுக்கஎரிபந்து எழுதுகோலோடுஇன்னும் பல பாரதிகள்பிறந்து வரட்டும்!என். ஆசைத்தம்பி, ஆவடி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !