உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஒரு நாளாவது...* நினைவுப் பேழை- அது ஒருநெருப்புப் பெட்டகம்!* உ<ள்ளத்தில்ஓளிந்து ஓடும்திராவக நதி!* உருக்கிக் கொண்டேயிருக்கும்ஒருவித எரிமலை!* நினைவுப் பேழையில்நிறைந்திருப்பதுபெரும்பாலும்நிராசை மட்டுமே!* ஒடுக்கப்பட்ட ஆசைகள்,உயிரோடுபுதைக்கப்பட்ட ஜீவசமாதிநினைவுகள்!* வெல்லப்படாதவையும்வெறுக்கப்பட வேண்டியவையும்உள்ளக்குவியலாய்உட்கார்ந்திருக்கின்றன!* நினைவுப் பேழையில்எந்த மூலையிலும்இடம்பெறாமல் போய் விடுகிறதுநல்லதும், நன்றியும்!* சுத்தங்களை எரித்துச்சுவைத்துவிடும் மனதுக்குஅசுத்தங்கள் மீதுஅப்படி என்ன ஒரு அக்கறை?* தின்ற சாக்லெட்டின்காகித கவசம்,தீர்ந்த நூல்கட்டைத்தாங்கிய குழல்,உதிர்ந்த பூவின்ஒற்றை இதழ் சருகு,இப்படி —பயன்படாதவற்றைப்பாதுக்காக்கும்குழந்தையின் பாங்குபிறவியிலிருந்தே பிடித்துக் கொண்டதா?* குப்பைகளைப் போற்றுவதில்குழந்தையாய் இருக்கிறோம்...குணத்தில் ஒரு நாளாவது...— வளர்கவி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !