உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அரிசிமரம்!* நண்டு நடக்கும்நீரோடையில்நீந்திக் குளித்தஞாபகம்!* பெரிய ரோட்டில்பழுதாகி நின்றபேருந்தில் படியேறிவிளையாடியஞாபகம்!* புளிய மரம் ஏறிபழம் பறித்துபங்கிட்டு சண்டையிட்ட ஞாபகம்!* பனை மரத்தின்பாதியில் பார்த்திட்டகிளி பிடித்து வளர்த்தஞாபகம்!* ஆணொன்றுபெண்ணொன்று எனஆடும், பசுவும் வளர்த்தஞாபகம்!* ஆலங்கட்டி மழையில்ஆட்டம் போட்டுஅம்மாவிடம் அடி வாங்கியஞாபகம்!* எண்ணத் திரையில்எப்போதாவதுஎழுகின்றன ஞாபகங்கள்பட்டணத்து இரைச்சலில்...* தேவைகள் அதிகமானதால்தேடல்கள் அதிகமானதுஅவசர உலகில்அவசர அவஸ்தைகள்!* காலைக்கடன் கழிக்ககால்மணி வரிசைவாளி நீருக்குவரிசையோ வரிசை!* அவசரக் குளியலில்அவசரப் பயணம்களைப்பை போக்க ஒளிரும் எலக்ட்ரான் திரை!* சாப்ட்வேர்வலைப் பின்னலில்சகலமும்அறியலாம்!* அருமை மகன்அருகமர்ந்து கேட்டான்...'அப்பா... எப்படி இருக்கும்அரிசி மரம்?'— அனுராதா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !